பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்கி தரும் திருத்தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் மிகவும் புகழ்பெற்றது அண்ணாமலையார் திருக்கோயில். திருவண்ணாமலையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீப திருவிழா.
உலக பிரசித்திபெற்ற இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும் இந்த திருக்தீபத்திருவிழாவின் 10ம் நாள் அன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் கருவரையில் பரணி தீபமும்,மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இந்த தீபத்திருவிழாவை காண உள்ளுர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து 40 லட்சம் முதல் 45 லட்சம் பக்தர்கள் வரை திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்.
திருவண்ணாமலையில் ஆண்டும் தோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீப திருவிழா இந்த ஆண்டு வருகின்ற டிசம்பர் மாதம் 01 ஆம் தேதி அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கோயில் கருவரையில் பரணி தீபமும்,மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
இந்த திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்க்கான பூர்வாங்க பணிகள் மேற்க்கொள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜ கோபுரத்தின் முன்பாக இன்று காலை 5.45-7.00 மணியளவில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க பந்தகால் நடப்பட்டது. பஞ்ச மூர்த்திகளின் தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. முன்னதாக அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்மந்த விநாயகர் ஆலயத்தில் பந்தகாலுக்கு பால்,தயிா், இளநீா்,தேன், மஞ்சள்,குங்குமம், விபூதி,சந்தனம் உள்ளிட்டவைகள் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














