கறுப்பர் கூட்டத்துடன் ஸ்டாலினையும் தெறிக்கவிட்ட சூப்பர் ஸ்டார்!

கந்தனுக்கு_அரோகரா

=====

இந்துக்கள் தினமும் பக்தியுடன் படிக்கும் கந்த சஷ்டி கவசத்தை கேவலமாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து கறுப்பர் கூட்டம் என்ற இந்து வெறுப்பர் கூட்டம், வீடியோ பதிவு வெளியிட்டு இருந்தது. இதுபோல ஏராளமான வீடியோக்கள் இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் கேவலப்படுத்தி வெளியிட்டு இருந்தனர்.

இது இந்துக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்து பெண்கள் கொதிப்படைந்தனர். இதனால் அவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள். பாஜக உள்பட இந்து அமைப்புகளும் இந்த போராட்டங்களை முன்னெடுத்து சென்றன. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், கறுப்பர் கூட்டத்திற்கு ஒரு சிறு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. இதன் மூலம் அவர், கறுப்பர் கூட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறார் என்பது தெள்ளத்தெரிவாக வெளியானது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கறுப்பர் கூட்டத்தை கண்டித்தும், அவர்கள் மீது திடமான நடவடிக்கை எடுத்த அதிமுக அரசை பாராட்டியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ரஜினி கூறியிருப்பதாவது:-

கந்த சஷ்டி கவசத்தை மிகக்கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதாக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத் துவேஷமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே!!!
கந்தனுக்கு அரோகரா!!!

இவ்வாறு ரஜினி அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

இதன் மூலம் காலம் காலமாக இந்துக்களின் மத உணர்வுகளை நிந்தனை செய்து வரும் தி.க மற்றும் தி.மு.க கூட்டத்திற்கு ரஜினி மரண அடி கொடுத்து உள்ளார். இனிமேலும் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்பதையும் சூசகமாக “ஒழியணும்” என்றப் பஞ்ச் மூலம் எச்சரித்துள்ளார்.

ரஜினியின் இந்த அறிக்கையானது, தொடர்ந்து இந்துக்களை இழிவுபடுத்தி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மரண அடியாக அமைந்து உள்ளது.

இந்த நிலையில் “#கந்தனுக்கு_அரோகரா” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் டிரென்ட் ஆகியுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 1,90,000 -க்கும் அதிகமானோர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட் செய்துள்ளனர்.

அதேபோல “#Rajinikanth” என்ற ஹேஷ்டேக்கும் அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்க்கை பயன்படுத்தி 32-க்கும் அதிகமானோர் டுவிட் செய்துள்ளனர்.

இது, இந்து விரோத கும்பல்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Exit mobile version