கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆன அரசு நடைபெற்று வருகிறது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு குறைந்தது வினாடிக்கு, 24,000 கன அடி வீதம், ஆகஸ்ட் மாதம் காவிரியில் தண்ணீர் அளிக்க வேண்டும். இது தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க ஆணையிடுமாறு, ஆக., 14ல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வரும் செப்.,21ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டி.கே சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. தற்போது அணையில் உள்ள நீர் கர்நாடகா மக்களின் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இல்லை என பேசியுள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள திமுக அரசு தமிழக மக்கள் தேவைக்கான குடிநீர் கூட பெற்றுத்தர முடியாத அரசாக இந்த கூட்டணியில் எதற்கு உள்ளது என கேள்வி எழுகின்றது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















