கேரளாவின் கொச்சி அருகேயுள்ள களமசேரியில் நேற்று நடைபெற்ற ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதில் 1 சிறுமி மற்றும் 2 பெண்கள் என 3 பேர் உயிரிழந்தனர். 52-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ்தீவிரவாதிகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில்கேரளாவில் ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டி ருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
களமசேரி ஜெபக்கூட்ட குண்டுவெடிப்பால் நாட்டின் அனைத்து மாநிலங்களின் போலீஸாரும் உஷார் நிலையில் உள்ளனர். குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லி, வர்த்தக தலைநகர் மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஜெபித்தபோது வெடித்தன’: களமசேரி குண்டுவெடிப்பு காலை 9.30 மணிக்கு ஜெபக்கூட்டத்தில் வெடித்துள்ளது. நாங்கள் மக்கள் ஜெபித்து கொண்டிருக்கும்போதே பயங்கர சப்தத்துடன் முதல் குண்டு வெடித்துள்ளது. அதிர்ச்சியில் மக்கள் கண்களை திறந்தபோது ஜெபக்கூட்டத்தின் மத்திய பகுதி தீப்பிடித்து எரிந்தது
இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் வலது, இடதுபுறத்தில் மேலும் 2 குண்டுகள் வெடித்தன. கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் காயமடைந்தனர். ஜெபக்கூட்டம் நடைபெற்ற மையம் போர்க்களமாக காட்சியளித்தது.
காவல்துறை விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மக்களின் உடைமைகளை எடுத்துச் செல்ல காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. பின்னர் காவல்துறையினர் ஏற்பாடு செய்த பேருந்துகளில் மக்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீசில் சரணடைந்தார். அதற்கு முன்னதாக ஃபேஸ்புக் பக்கத்தில் தாம் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்பதாகவும் டொமினிக் மார்ட்டின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் பிரார்த்தனை கூட்டட்தை ஏற்பாடு செய்த Jehovah Witnesses group தேசவிரோதிகள் எனவும் அந்த வீடியோவில் டொமினிக் மார்ட்டின் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டின் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) இந்த விசாரணையை நடத்த உள்ளது.