கேரளாவில் வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதற்கு காரணம் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதாலா?

தேங்காய் எண்ணை கொரோனா வைரசிலிருந்து நம்மை காப்பாற்ற போகிறதா ? கேரளாவில் வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதற்கு காரணம் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதாலா?

யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதோ, அவர்கள் கொரோனா வைரஸ் நோயிலிருந்து எளிதில் குணமடைகிறார்கள். லாரிக் ஆசிட், நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

லாரிக் ஆசிட் (Lauric acid (dodecanoic acid) is a medium-chain fatty acid, or medium-chain triglyceride (MCT), found in foods that contain saturated fat.)

லாரிக் ஆசிடிலிருந்து மோனோலாரின் (monolaurin) உருவாகிறது. தாய்ப்பாலில் மோனோலாரின் மிக அதிக அளவில் காணப்படுகிறது. தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு இதுதான் காரணம்.

உலகெங்கும் பல லட்சம் மக்கள் சீனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தாலும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படவில்லை. ஏனெனில் தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அவர்களை பாதுகாக்கிறது.

உணவுப்பொருட்களை பொறுத்தவரையில், மற்றவற்றைக்காட்டிலும் தேங்காயில் அதிகபட்ச லாரிக் ஆசிட் உள்ளது.

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் ஆசிய நாடுகளில் காணப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை மலையாளிகளுக்கு அவர்களது உணவு பழக்கம் (முக்கியமாக தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உபயோகம்) மூலமாகவே 8 முதல் 20 கிராம் வரை லாரிக் ஆசிட் தினசரி கிடைத்துவிடுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்காக தினசரி 20 கிராம் வரை லாரிக் ஆசிட் நமக்கு தேவைப்படுகிறது.

பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் மூலம் தேங்காயிலிருந்து கிடைக்கும் லாரிக் ஆசிட் நம் வைரஸை எதிர்த்துப் போராடும் சக்தியை அதிகரிக்கிறது என்று தெரியவந்துள்ளது.

தினசரி நமது உணவில் தேங்காயை அதிக அளவில் சேர்த்துக் கொள்வோம். தேங்காய் எண்ணெயையும் அதிகம் பயன்படுத்தத் துவங்குவோம்.

ஆராய்ச்சிக் கட்டுரையை படிக்க லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
https://www.modernghana.com/news/993000/the-magic-coconut-and-covid.html

கட்டுரை:- வலதுசாரி எழுத்தாளர் பத்மநாபன் நாகராஜன்.

Exit mobile version