சர்ச்சுகளில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.திமுக தலைவலி அவசர ஆலோசனையில் அறிவாலயம்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று நடத்தினார்.மேடைக்கு அருகில் இருந்து திடீரென மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்,அதன் பிறகு சுமார் 800 மீட்டர் தூரம் கொண்ட நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடியை மாலை 4:25 மணிக்கு மேடையிலே இருக்கிற தானியங்கி பொத்தான் மூலமாக அழுத்தி ஏற்றி வைத்தார் விஜய்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் 4:30 மணி முதல் 6:00 மணி வரை என்ற நிலையில், ராகு காலம் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவே மாநாட்டின் தொடக்கத்தை பிரகடனப்படுத்தும் வகையில்… கட்சியின் கொடி பாடல் ஒலிக்க கொடி ஏற்றினார் விஜய்.இந்த நிலையில் அவர் கட்சியின் கொள்கை மற்றும் எதிரிகள் குறித்து சர்க்கார் படத்தின் மீதி கதையை போல் வசனங்களை பேசி மேடையை தெறிக்கவிட்டார் விஜய். 60 படத்திற்கும் மேல் நடித்தவருக்கு வசனங்களையும் மேடை அலங்காரத்தையும் சொல்லி தரவேண்டியதில்லை.

இந்த நிலையில் இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது, “நாம கட்சியை அறிவித்தபோதே நம்முடைய எதிரிகள் யார் என்பதை டிக்ளேர் செய்துவிட்டோம். மக்களை மதம், சாதி, இனம், மொழி, பாலினம் என பிரித்து ஆட்சி செய்யும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் மட்டும் தான் நமக்கு எதிரியா? நமக்கு இன்னொரு கோட்பாடும் உள்ளது. ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பது.

ஊழல் வைரஸ் மாதிரி பரவிக்கிடக்கிறது. இந்த பிளவுவாத சக்திகளைக் கூட நாம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இந்த கரப்ஷன் எப்படி ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கவே முடியாது. என பேசிய விஜய்க்கு ஆதரவு கொடுக்க ஒட்டுமொத்த சர்ச்சுகளும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுநாள் வரை தேர்தலில் யாருக்கு ஒட்டு போடவேண்டும் என்பதை கிறிஸ்துவர்களும் இஸ்லாமிய பெருமக்களும் தங்களின் சர்ச் மாசூதிகளில் கூடி முடிவு எடுப்பார்கள், இதுநாள் வரையில் பாஜக எதிர்ப்பு கொண்ட கட்சிகளுக்கு ஓட்டளித்து வந்தார்கள் குறிப்பாக திமுகவுக்கு தான் கிருஸ்துவ,இஸ்லாமியர்களின் ஒட்டு விழுந்தது. இந்த நிலையில் தற்போது புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் ஜோசப் விஜயும் பாஜகவுக்கு எதிரான கொள்கை நிலைப்பாடை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் கிருஸ்துவர்கள் ஞாயிறு தோறும் தேவாலயம் சென்று பிரார்த்திப்பது வழக்கமான ஒன்று. இச்சூழலில் அங்கு இனிவரும் தேர்தலில் புதியதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய் அவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தேவாலயங்களின் ஆதரவும் நடிகர் விஜய்க்கு தான் என முடிவெடுத்துள்ளார்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுவரை சிறுபான்மையினர் ஓட்டுக்களை மொத்தமாக அள்ளிய திமுக இனி வரும் தேர்தல்களில் எப்படி சிறுபான்மையினர் ஓட்டுக்களை வாங்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது அதுமட்டுமில்லாமல் 2026 தேர்தல் உதயநிதி ஸ்டாலின் விஜய் அண்ணாமலையா என்ற கோணத்தில் சென்றால் திமுகவுக்கு பலத்த அடி உள்ளது. இதனால் அவசர ஆலோசனையில் அறிவாலயம் இறங்கியுள்ளது.

Exit mobile version