மற்ற நாடுகளில் எந்த ஆட்சியை நிறுவ வேண்டும் என உலக வல்லரசான அமெரிக்கா முடிவு செய்யும் அதே பாணியை கையில் எடுத்து அமெரிக்காவுக்கு சவால் விட்டுள்ளது இந்தியா. கனடா தேர்தலில் தான் நினைத்த பிரதமரை கொண்டுவந்துள்ளது இந்தியா. உலக நாடுகளே வியந்து பார்த்துள்ளது. மேலும் அமெரிக்காவும் கனடாவுக்கும் இடையே உரசல் உள்ளது. அதனால் ஆட்சியை மாற்றலாம் என எண்ணியது அமெரிக்க எனும் விடகண்டான் . ஆனால் தற்போதைய பிரதமரே வெற்றி பெறவேண்டும் என இந்தியா நினைத்து வேலைகளை செய்து அமெரிக்கா கண்ணில் விரலை விட்டு ஆட்டியுள்ளது. கனடாவில் பார்லியின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி பார்லியை கலைத்தார். தேர்தலை முன்கூட்டியே நடத்த அழைப்பும் விடுத்திருந்தார்.கனடா நாட்டின் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி வெற்றி பெற்று கனட அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு லிபரல் கட்சியின் தலைவராக பதவியேற்றவர். மார் கார்னியின் வெற்றிக்கு முதல் தலைவராக வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.
லிபரல் கட்சியின் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையிலான உறவு அத்தனை இலகுவானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடியையும் இந்தியாவையும் எதிர்த்த ட்ரூடோவிற்கு கனடாவில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் அவரை பதவி விலக சொல்லி உட்கட்சியில் பூசல் வெடித்தது இதனை தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார் அதனை தொடர்ந்து தொடர்ந்து பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி இவர் இந்தியாவுடன் நட்புறவை கொண்டவர்.. தற்போது தேர்தலில் வென்று அவரே பிரதமராக தொடர்கிறார்.
கனடா நாட்டின் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் லிபரல் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதற்கிடையே ட்ரூடோ காலத்தில் கிங் மேக்கராக இருந்த ஜக்மீத் சிங் என்ற காலிஸ்தான் ஆதரவாளர் படுதோல்வி அடைந்துள்ளார். ஜக்மீத் சிங்கின் தோல்வி இந்தியா கனடா உறவுக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.கனடாவில் கடந்த சில காலமாகவே அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், ட்ரூடோ சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமராகப் பதவியேற்ற மார்க் கார்னி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலை அறிவித்தார். அங்கு நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
கனடா தேர்தல்
இதில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. சில தொகுதிகளில் இன்னும் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், மொத்தமுள்ள 343 சீட்களில் லிபரல் கட்சி 168 இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்சர்வேடிவ் கட்சி 144 இடங்களையும் பெலோயில்-சாம்ப்ளி கட்சி 24 இடங்களையும் கைப்பற்றி இருக்கிறது. அதேநேரம் காலிஸ்தான் ஆதரவு சேர்ந்த ஜக்மீத் சிங் இதில் படுதோல்வி அடைந்தார். அவரது தோல்வியும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஜக்மீத் சிங் தோல்வி
காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஜக்மீத் சிங், கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சிக்குத் தலைமை தாங்கினார். கடந்த ட்ரூடோ ஆட்சியில் கிங் மேக்கராக இருந்த ஜக்மீத் சிங், இந்தியா மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தார். குறிப்பாக கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து கூறி வந்தார். இந்தியா கனடா இடையே உறவு மோசமாக இவரும் முக்கிய காரணமாக இருந்தது.
இந்தச் சூழலில் தான், அவரது கட்சி இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அங்கு இவரது புதிய ஜனநாயகக் கட்சியால் வெறும் 7 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அவ்வளவு ஏன் ஜக்மீத் சிங்கால் தனது சொந்தத் தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. பர்னபி சென்ட்ரல் என்ற தொகுதியில் போட்டியிட்ட ஜக்மீத் சிங்கிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர்.
சொந்தத் தொகுதியிலும் தோல்வி
கடந்த தேர்தலில் எம்பியாக வென்ற ஜக்மீத் இந்த முறை 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். ஆளும் லிபரல் கட்சியின் வேட் சாங் 42% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில், கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் யான் 38.7 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஜக்மீத் சிங் வெறும் 18.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
ஏன் முக்கியம்?
கடந்த 2021 தேர்தலில் ட்ரூடோ ஆட்சி அமைக்க ஜக்மீத் சிங் ஆதரவு முக்கியமாகத் தேவைப்பட்டது. இதனால் அவர் ட்ரூடோ அரசுக்குப் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஹர்தீப் சிங் விவகாரத்திலும் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க ஜக்மீத் சிங் அழுத்தம் கொடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் தான் அவர் மட்டுமின்றி அவரது கட்சியும் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஒரு கட்டத்தில் கிங் மேக்கர் என்று வர்ணிக்கப்பட்ட ஜக்மீத் சிங் சொந்தத் தொகுதியிலேயே தோல்வி அடைந்துள்ளார். இந்தத் தேர்தலில் அவரது புதிய ஜனநாயகக் கட்சி ஏழு இடங்களில் மட்டுமே வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா சட்டப்படி ஒரு கட்சி தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறக் குறைந்தது 12 இடங்களில் வென்றிருக்க வேண்டும். இவரது புதிய ஜனநாயகக் கட்சி ஏழு இடங்களில் மட்டுமே வென்றுள்ளதால் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது.
உறவு மேம்படும்
அதேநேரம் இவரது கனடாவில் காலிஸ்தான் ஆதரவு காலியாகிவிட்டதையே குறிக்கிறது. மேலும், இந்தியாவுக்கும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ட்ரூடோ அரசில் கூட்டணியில் இருந்து கொண்டு ஜக்மீத் சிங் பல்வேறு குடைச்சல்களைக் கொடுத்தார். இப்போது அவரது கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அவரால் எதுவுமே செய்ய முடியாது. இதன் மூலம் இந்தியா கனடா உறவு மீண்டும் சீராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவின் ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது. அமெரிக்காதான் மற்ற நாடுகளில் எந்த ஆட்சி அமைய வேண்டும் என தீர்மானிப்பார்கள் ஆனால் இந்த அதை தற்போது இந்தியா செய்துள்ளது .அடுத்ததாக வங்கதேசம் மற்றும் நேபாளத்தை இந்தியாவின் ஆதரவு நாடக மாற்றும்வேலைகளை முடுக்கி விட்டுள்ளது இந்தியா.
