கர்ப்பிணி யானையை கொன்ற வில்சன் கைது! அப்துல் கரீம்,ரியாசுத்தீன் தலைமறைவு!

கேரளாவின் மலப்புரம் வனத்தையொட்டிய பகுதியில் காட்டு யானைகளின் உணவிற்காக வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களுக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து கர்ப்பிணி யானை ஒன்று பசியில் சுற்றி சுற்றி வந்துள்ளது.

யானையின் யாரையும் தாக்கவும் இல்லை அது பசிக்காக உணவு தேடி அலைந்துள்ளது. இந்த நிலையில் அங்கிருந்த மனிதாபிமான கேரளா மக்கள் அன்னாச்சி பழத்தில் பட்டாசுகளை நிரப்பி கர்ப்பிணி யானைக்கு கொடுத்துள்ளனர். அன்னாச்சி பழத்தை ருசித்து சாப்பிட்ட அந்த யானைக்கு, பட்டாசு வெடித்ததில் வாய், நாக்கு கிழிந்தது. வலி தாங்க முடியாமல் தவித்த அந்த யானை ஆற்றின் நடுவே நின்று கொண்டே மரணமடைந்தது.

வாயில் வெடி காயத்துடன் உணவருந்த முடியாமலும் வலியாலும் இரண்டு வாரங்கள் பட்டினி கிடந்து இறந்துள்ளது யானை என்கிறது பிரேத பரிசோதனை. பழத்தில் வெடி வைத்தவர்கள் யார் என விசாரணை நடந்து வந்தது இந்த நிலையில் வில்சன் என்பவரை கைது செய்தது கேரள காவல்துறை. அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட வில்சன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.


எஸ்டேட் முதலாளி அப்துல் கரீம் உத்தரவின்பேரில் அவரிடம் வேலைபார்க்கும் வில்சன் அந்த யானைக்கு வெடிபொருளடங்கிய அன்னாசி பழத்தை கொடுத்து, அது யானையின் வாயில் வெடித்து, அந்த வேதனையில் யானை இறந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் முதலாளி அப்துல் கரீம் தன் மகன் ரியாசுத்தீனுடன் தலைமறைவானார்கள்.

Exit mobile version