மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் மாற்று வீடு வழங்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியருக்கு .எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மனு!!!

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் மாற்று வீடு வழங்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியருக்கு .எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மனு!!!

கோவை மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 84 வார்டு கெம்பட்டி காலனி, உப்புமண்டி பின்புறம் வசித்து வரும் நாகேந்திரன், பிரியா இவர்களின் இரண்டரை வயது ஆண் குழந்தை கிரண் கடந்த 13.11.2021 அன்று இரவு பெய்த மழையில் இவர்கள் குடியிருந்த வீட்டின் சுவர் இடிந்து இவர்கள் மீது விழுந்து மூவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

15.11.2021 திங்கள்கிழமை இரவு குழந்தை கிரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து என்ற செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும். அந்த குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்க்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்ததோடு. மேலும் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கும், படுகாயம் அடைந்த தாய் தந்தையருக்கும் தமிழக அரசின் அதிகபட்ச நிவாரண தொகையை உடனடியாக வழங்கிட ஆவண செய்து அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வீடு ஒதுக்கி தருமாறும். அந்த மனுவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Exit mobile version