வட மாநில அரசியலை மாற்றுகிறது லக்கின்பூர் கலவரம்! கலவரக்காரர்களால் அடித்துக் கொல்லபபட்ட 4 பேர் பற்றி வாய் திறக்காத ஊடகங்கள்!

லக்கின்பூரில் விவசாயிகள் போர்வையில் போராடிய கலவரகாரர்களின் மீது மத்திய பாஜக அமைச்சர் அஜய் மிஷ்ரா வின் மகன் ஆசிஸ் மிஷ்ராவின் கார் ஏறியதால் இறந்து போன 4 சீக்கியர்களை வைத்து உத்தர பிரதேசத்தில் பாஜகவின் வெற்றியை தடுத்து விடலாம் என்று பாஜக எதிர்ப்பாளர்கள் கனவில்
இருக்கிறார்கள்

ஆனால் கலவரக்காரர்களால் அடித்துக் கொல்லபபட்ட 4 பேர்களுக்கு ஆதரவாக உருவாகி வரும் இன அரசியல் காலம் காலமாக புராண காலமான பரசுராமர் காலம் தொட்டே இந்துசமயத்தில் இருந்து வரும் ஒரு இனப்பகையை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறது.

இந்த லக்கின்பூர் கலவரம் இது வரையோகி அரசுக்கு எதிராக இருந்த பிராமணர்களை ஆதரவாக மாற்றி இருக்கிறது அது மட்டுமல்லாமல் 25 சதவீதம் பிராமணர்களை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தின் இந்த முறை கிஷோர் உபாத்யா ய என்கிற பிராமண தலைவரை முன் நிறுத்தி புஷ்கர்சிங் தாமி என்கிற ராஜ் புத்ர பாஜக முதல்வரை வீழ்த்த நினைத்த காங்கிரசின் கனவில் மண்ணை அள்ளி வீசியிருக்கிறது.

லக்கின்பூர் கலவரம் கலவரக்கார்ர்களால் கொல்லப்பட்ட 4 பேரின் குடும்பங்களுக்கும் பல பா.ஜ.க எம்எல்ஏக்கள் தங்களின் சொந்த பணத்தி ல் இருந்து பல லட்சங்களை இழப்பீடாக அளித்துக்கொண்டு இருக்கிறார்கள்.அதோடு யோகி அரசும் அவர்களுக்கு மிக சிறப்பாக உதவி செய்து வருகிறது.

மற்ற கட்சிகள் அடித்து கொல்லப்பட்ட 4 பேரும் பாஜக ஆதரவாளர்கள் என்பதால் அவர்களின் குடும்பங்களை சந்தித்து மனிதாபிமான அடிப்படையில் ஆறுதல் கூட சொல்ல விரும்பாத நிலையில் பாஜகவினரின் உதவிகள் ஒட்டுமொத்த பிராமண சமூகத்தையும் யோகி அரசுக்கு ஆதரவாக திருப்பி இருக்கிறது.

விவசாயிகள் என்கிற போர்வையில் இறந்து போன 4 சீக்கியர்களுக்காக வரிந்துகட்டி நிற்கும் அரசியல் கட்சிகள் அதே விவசாயிகள் போர்வையில் இருந்தவர்களால் அடித்து கொல்லப்பட்ட 4 பேரை பற்றி பிஜேபியை தவிர எந்த அரசியல் கட்சியும் அக்கறை காட்டாதது பிராமணர்களிடையே மிகவும் கோபத்தை உருவா க்கி இருக்கிறது.

வன்முறை கும்பலால் அடித்து கொல்லப்பட்ட 4 பேரில் 3 பேர் பிராமணர்கள் ஒருவ ர் நிஷாத் என்கிற மீனவ இனத்தை சார்ந்தவர்.கிழக்கு உத்தர பிரதேசம் என்கிற பூர்வாஞ்சல் ரீஜனில் பிராமணர்களும் நிஷாத்களும் தான் பெருமளவில் இருக்கிறார்கள். பூர்வாஞ்சல் ரீஜனில் 176 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன.

403 சட்டமன்றதொகுதிகளை உடைய உத்தரபிரதேச த்தில் பூர்வாஞ்சல் ரீஜன் தான் அதிகளவி ல்தொகுதிகளை வைத்து இருக்கிறது.பூர்வாஞ்சலை கைப்பற்றினாலே போதும் அடுத்தும் பிஜேபி ஆட்சி தான். இந்த நிலையில் பூர்வாஞ்சல் ரீஜனில் உள்ள மிகப்பெரிய இனங்களான பிராமணர்கள் மற்றும் நிஷாத்களிடையே அவர்களின் இனத்தை சார்ந்தவர்களை உத்திரபிரதேசத்திற்கு சம்பந்தமே இல்லாத சீக்கியர்கள் அடித்து கொன்றது மிகப்பெரிய அளவில் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது

இதனால் ஒட்டுமொத்த பூர்வாஞ்சல. ரீஜனே பாஜகவிற்கு ஆதரவாக இருக்கிறது என்பதால் உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.காங்கிரசை நினைத்தால் தான் காமெடியாக இருக்கிறது.உத்தரபிரதேசத்தில் அரை சதவீதம் கூட இல்லாத சீக்கியர்களுக்கு ஆதரவாக நின்று இது வரை காங்கிரசி்ற்கு வாக்களித்து வந்த பிராமணர்களின் ஒட்டுமொ த்த கோபத்திற்கும் ஆளாகி விட்டார்கள் என்ன செய்ய தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும்?

மற்ற மாநிலங்களில் உள்ளது மாதிரி பிராமணர்கள் உத்தரபிரதேசத்தில் கிடையாது.சுமார் 12 சதவீதம் இருக்கிறார்கள்பல முறை உத்தரபிரதேசத்தில் பிராமண ர்களின் ஆசைப்படியே ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது.இம்முறை யோகி அரசு மீது பிராமணர்களுக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை என்பதால் தான் பிராமணர்களை சரி கட்ட பிராமணர்களான அஜய் மிஸ்ரா மோடி அமைச்சரவையிலும் ஜிதன் பிரசாதா யோகி அமைச்சரவையிலும் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டார்கள்.

இருந்தாலும் பிராமணர்களுக்கு யோகி அரசு மீது பெரிதாக ஆர்வம் இல்லை கா ரணம் என்னவென்றால் யோகி ஒரு ராஜ் புத் முதல்வர் காலம் காலமாக வட மாநிலங்களில் பிராமணர் VS ராஜபுத்திரர் இடை யே அரசியல் போட்டி இருந்து கொண்டு இருக்கிறது.இதற்கு காரணம் தேடினால் புராண கால ம் நோக்கித்தான் செல்ல வேண்டும்.மகா விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரும் காமதேனு பசுவும் தான் இன்று வரை நிகழும் பிராமணர் VS ரா ஜ்புத் மோதலுக்கு காரணமாக இருக்கிறார்கள் என்றே கூறலாம்.

பரசுராமரின் தந்தையான ஜமத்கனி முனிவரிடம் இருந்த காமதேனு பசுவை கார்த்த வீர யார்ச்சனன் என்கிற சத்திரிய மன்னன் எடுத்து செல்ல அதனால் பரசுராமர் கார்த்த வீர யார்ச்சனனை கோடாரியால் வெட்டி கொல்ல பதிலுக்கு மன்னரின் மைந்தர்கள் பரசுராமரின் தந்தையான ஜமத்கனி முனிவரை கொலை செய்ய பதிலுக்கு பரசுராமர் மன்னருடைய பிள்ளைகளை கொன்று விட்டார்.

அதோடு விட்டாரா பரசுராமர?.இல்லையேசத்திரிய இனமே இந்த பூமியில் இருக்ககூடாது என்று சத்திரிய மன்னர்களின்வழி வந்த 21 தலைமுறைகள அழித்து இருக்கிறார் என்றால் புராணங்ளில் மனிதனை விட பசு எவ்வளவு உயர்வாக இருந்தது பிராமணர்கள் பசுவுக்காக தங்களின் குணத்தையே மாற்றி ஆயுதம் ஏந்தியவர்கள் என்று பரசுராமரின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

இப்படி பரசுராமர் காலத்தில் ஆரம்பித்த பிராமணர் VS சத்திரியர் மோதல் இப்பொழுது அரசியல் போட்டியாக வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரபிரதேசம்ஹிமாச்சல் பிரதேசம் உத்தர காண்ட் என்று பிராமணர்கள் அதிகளவில் உள்ள மாநிலங்களில் பிராமணர்கள் மற்றும் சத்திரியர் வழி வந்த ராஜபுத்திரர்களிடையே இருக்கிறது.உத்தரபிரதேசத்தில் 1991 ல் பிஜேபி முத லில் ஆட்சி அமைத்த பொழுது முதல்வரா ன கல்யாண் சிங்கை பிராமணர்கள் ஆதரித்து நின்றார்கள்.காரணம் கல்யாண்சிங் லோதா என்கிற ஓபிசி வகுப்பை சார்ந்தவர்.கல்யாண் சிங்கிற்கு பதிலாக ராஜ்நாத் சிங் என்கிற ராஜ்புத்தை பிஜே பி உத்தரபிரதேசஅரசியலில் முன்னிறுத்தியது.

இதனால் தான் பிராமணர்கள் பிஜேபி யை விட்டு விலகி காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியை நோக்கி சென்றதால் பிஜேபி உத்தரபிரதேசத்தில் 4 வது இடத்தி ற்கு போய்விட்டது.உத்தர பிரதேச அரசிய லில் மீண்டும் தலையெடுக்க ராமர் கோயில் பிரச்சனையை பல முறை கையில் எடுத்தும் பிஜேபி பக்கமாக பிராமணர்கள் திரும்பாததற்கு முக்கிய காரணம் இந்த பிராமணர் VS ராஜ்புத் அரசியல் தான்.

இந்த நிலையில் மோடி என்கிற ஓபிசி பிரதமர் வேட்பாளர் கேசவ பிரசாத் மௌரிரியா என்கிற ஓபிசி உத்தரபிரதேச பிஜேபி தலைவர் என்று பிஜேபி உத்தர பிரதேச அரசியலில் அற்புதமாக 2014 லோக்சபா தேர்தலில் காய் நகர்த்த ஒட்டு மொத்த பிராமணர்களும் பிஜேபியை நோக்கி திரும்பியதால் வரலாறு காணாத வகை யில் 73 லோக்சபா தொகுதிகளில் பிஜே பி வெற்றி பெற்றது.

2017 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு வரலாறு காணாத வகையில் 325 சட்டமன்ற தொகுதிகளில் பிஜேபி கூட்டணி வெற்றி பெற காரணம் பிராம ணர்கள் தான் கேசவ பிரசாத் மௌரியா என்கிற ஓபிசி தலைவரை முன் வைத்து பிஜேபி தேர்தலை சந்தித்ததால் பிராம ணர்கள் பிஜேபிக்கு அதரவாக இருந்தார்கள்.ஆனால் எதிர்பாராத விதமாக ராஜபுத்திரரான யோகி உத்திர பிரதேச முதல்வரானதை பிராமணர்கள் விரும்ப வில்லை. இதனால் தான் யோகி முதல்வரான பிறகு நடைபெற்ற பல இடைத்தேர்தல்களில் பிஜேபி தோல்வி அடைந்தது.

யோகி முதல்வரான பிறகு அவர் 5 முறை எம்பியாக வெற்றி பெற்ற கோரக்பூர் லோக்சபாதொகுதியின் இடைத்தேர்தலி ல் பிஜேபி தோல்வியடைய காரணம் யோகியை உத்தர பிரதேச முதல்வராக பிராமணர்கள் ஏற்கவில்லை என்பது தான்.யோகி முதல்வரான பிறகு உத்தர பிரதே ச போலீஸ் நடத்திய என்கவுண்டர்களில் 11 பிராமணர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் .குறிப்பாக கேங்ஸ்டார் விகாஸ் துபேயின் என்கவுண்டர் யோகி அரசு மீது பிராமணர்களுக்கு கடுமையான கோபத்தை உருவாக்கி விட்டது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு ஆதரவு கிடையாது என்று பல பிராமண சம்மே ளனங்கள் கூறி வந்தன.இதை சரிக்கட்ட தான் உத்தர பிரதேச த்மில் பிஜேபியின் பிராமணத்தலைவராக அஜய் மிஷ்ரா மத்திய உள்துறைஇணை அமைச்சராக்கப்பட்டார்.இருந்தாலும் பிராமணர்களுக்கு யோகி அரசு மீதுகோபம் குறைய வில்லை.இந்த நிலையில் லக்கின்பூர் கலவரத்தில்அடித்து கொல்லப்பட்ட 3 பிராமணர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு அரசியல் கட்சியும்வாய் திறக்காத நிலையில் அவர்களின் குடும்பங்களை தேடிச்செல்லும் யோகி அரசின் உதவிகளை பார்த்து பிராமணர்கள் மனமாறி ராஜ்புத்தான யோகியை நோக்கி திரும்பியிருக்கிறார்கள்.

ஆக பரசுராமர் காலத்தில் ஆரம்பித்த பிராமணர்VS சத்திரியர் இடையேயான வெறுப்பு காலப்போக்கில் வட மாநிலங்களில் பிராமணர் VS ராஜபுத்திரர்கள்என்கிற அரசியல் பகையை உருவாக்கிவிட்டது. இதை முடித்து வைத்து இருக்கிறது லக்கின்பூர் கலவரம்.

Exit mobile version