அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளர். இவரின் தந்தை தீவிர திமுக உறுப்பினர் முருகானந்தம்.
இந்த நிலையில் மாணவி லாவண்யா திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் லாவண்யா இறப்பதற்கு முன் பேசிய வீடியோ வைரலானது. தன்னையும் எங்கள் குடும்பத்தையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தினர். நாங்கள் மதம் மாற மறுத்துவிட்டோம். இதனை தொடர்ந்து , தன்னை விடுதிகளை சுத்தம் செய்ய வைப்பது, கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தினர். இது போன்ற நிறைய கொடுமைகளை எனக்கு பள்ளி நிர்வாகம் தொடர்ந்து கொடுத்தது. இதனால் தனக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டது. இதனாலேயே விஷம் குடிக்க நேரிட்டது என மாணவி கண்ணீருடன் தனது மரண வாக்கு மூலத்தை பதிவு செய்தார்.
மேலும் மரணம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஊடகங்கள் வாய் திறக்க மறுத்துவிட்டன. திமுக சார்பில் ஒரு கண்டன குரல் கூட எழவில்லை. ஒட்டுமொத்த நெறியாளர்களும் சமூக ஆர்வலர்கள் பெண்ணியம் பேசுபவர்கள் அனைவரும் காணாமல் போய்விட்டார்கள். முக்கியமாக நடிகர் விஜய் சூர்யா போன்றோர் அனிதா மரணத்துக்கு குரல் கொடுத்து வீடு வரை சென்றார்கள், ஆனால் மாணவி லாவண்யா மரணத்திற்கு எங்கு சென்றார்கள் என்பது தெரிவியவில்லை.
இந்த நிலையில் பா.ஜ.கவினர் இந்து அமைப்புகள் கடந்த சில நாட்களாக பல்வேறு முறையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இறந்த மாணவியின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாணவியை கட்டாயப்படுத்தி மதமாற வற்புறுத்திய பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மதமாற்றம் செய்வதை தடுக்கும் விதமாக சட்டம் இயற்ற வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.
மாணவி மதமாற்றத்தால் தான் தற்கொலை செய்து கொண்டார் என தஞ்சை எஸ்.பி. ரவளிபிரியாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் மாஜிஸ்திரேட்டிடம் போலீசாரிடமும் மாணவியின் வாக்குமூலத்தில் மதம் மாற்றம் தொடர்பான தகவல் இல்லை என்று எஸ்.பி. கூறினார்.
மாணவியின் தந்தை முருகானந்தம் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் தன மகள் லாவண்யா தற்கொலை செய்து கொண்டார் என புகாரளித்தார். இதனை வாக்குமூலங்களை பெற்றோர்கள் மாஜிஸ்திரேட்டு முன்பாக ஆஜராகி அவர்களுடைய மகள் தெரிவித்த தகவலை கூற வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாணவியின் பெற்றோர்கள் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோர் தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி பாரதி முன்பாக நேற்று வாக்கு மூலம் அளித்தனர். இவர்களின் வாக்கு மூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட இருக்கிறது.