பல மொழிகளை கற்று கொள்ளுங்கள்! இந்தி தெரியாத போட குரூப்புக்கு பாடம் எடுத்த கிரிக்கெட் வீரர் நடராஜன்!

பல பேர் தங்கள் சுயலாபத்திற்காக ஹிந்தி கற்றுக்கொள்ளாதீர்கள், மும்மொழி கொள்கை வேண்டாம், என கூறிவிட்டு அவர்களின் குழந்தைகள் வெளிநாட்டு பள்ளிகளிலும் மும்மொழி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளிலும் படிக்கவைத்து வருகிறார்கள். ஏன் தமிழ் தமிழ் என கூறும் நடிகர் சூர்யா தன் குழந்தைகளுக்காக மும்பபையில் செட்டில் ஆகிவிட்டார். அவரது தம்பி ஹிந்தி கற்றுவருகிறார். ஹிந்தி தெரியாமல் பெரிதும் கஷ்டப்படடுகிறேன் என ஒரு பேட்டியில் கூறினார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரையில் ஏழைகளுக்கு ஒரு கல்வி பணக்காரர்களுக்கு ஒரு கல்வி முறை என இருக்கிறது. பணம் வைத்திருப்பவர்கள் அனைவரும் அணைந்து மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் அரசு பள்ளியில் படிப்பவர்கள் மும்மொழி கற்று கொள்ளக்கூடாதா என்ற கேள்வி தற்போது அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.இந்தி தெரியாது போடா என டீ ஷர்ட் போட்ட பல நடிகர்களுக்கு ஹிந்தி தெரியும் ஹிந்தி படத்தில் நடித்து சம்பாதித்து வருகிறார்கள். ஏன் உதயநிதியின் அக்கா செந்தாமரை நடத்திவரும் பள்ளியில் ஹிந்தி இரண்டாம் மொழியாக கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2020 ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அவர் படித்த ஏவிஎஸ் கல்லூரியில் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையடினார். மிகவும் எதார்த்தமாக பேசி அனைவரின் கவனத்தை பெற்றார். இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டது, மாணவர்கள் பல மொழிகளை கற்றுக்கொள்ளவேண்டும் என பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

அவர் பேசியபோது மாணவர்களான நீங்கள் ஒரு இலக்கை நோக்கி போகும் போது அதை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். அப்பொழுது தான் அந்த இலக்கை உங்களால் அடைய முடியும். என்னுடைய சொந்த செலவில், சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி எனது கிராமத்தை சுற்றியுள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெற வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் இந்த விளையாட்டு மைதானம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்ற கிரிக்கெட் வீரர்கள் இப்பொழுது TNPL கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றார்கள் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இன்னும் என் கிராமத்தைச் சார்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் எங்கு கிரிக்கெட் விளையாட சென்றாலும் என்னுடைய சொந்த செலவில் அவர்களை அனுப்பி வைப்பேன்.முன்பெல்லாம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த சூழ்நிலை மாறி தற்போது எல்லா துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளது. அதற்கான கடின உழைப்பு உங்களிடம் தான் உள்ளது. எந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்தத் துறையின் மீது அன்பு செலுத்த வேண்டும்.

அதேபோல நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையின் மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறீர்களோ, எவ்வளவு உண்மையாக இருக்கிறீர்களோ அந்த துறையில் கடின உழைப்பு எந்த அளவிற்கு உள்ளதோ அதற்கான பயன் கண்டிப்பாக கிடைக்கும். அதற்கு உதாரணமே நான்தான். எனது வீட்டில் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக ரேஷன் அரிசி சாப்பிட்டு இந்த கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வந்தேன். அதேபோல எனது அம்மா சமைக்கும் உணவுதான் எனக்கு ஹெல்தி என்ற எண்ணத்தை உருவாக்கிக்கொண்டேன்.

தல தோனி மற்றும் தல அஜித் முதல் சந்திப்பு குறித்து மாணவர் கேள்விக்கு பதில் அளித்த நடராஜன், ”ஒரு சிலரை பார்த்தாலே மோட்டிவேஷன் ஆகும். சிலரை பார்த்து பேசினால் மிதப்பது போல இருக்கும். தோனியை பார்க்கும் போது அந்த வைப். அவர் இருக்கும் அணி ஏன் சிறப்பாக செயல்படுகிறது என்றால், அவரைப் பார்த்தாலே நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தோன்றும். தோனி ஒரு பாசிடிவ் மனிதர் அவர். அதேபோன்று தல அஜித் எனக்கு ஸ்பெஷல். ரொம்ப நாளாக தலையை பார்க்க வேண்டும் என்று இருந்தேன். எதார்த்தமாக ஹோட்டலில் சந்தித்தோம், அவ்வளவு பெரிய மனிதர் அனைவரையும் ஒரே மாதிரி பார்த்தார். எனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய பின்னர் அனைவரின் கார் கதவையும் திறந்து வழி அனுப்பி வைத்தார். இது போன்ற மனிதர்களை சந்திக்கும் போது வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தன்னம்பிக்கை வரும்” என்றார்.

எனக்கு ஹிந்தி தெரியாததால் நான் அங்கு தனிமையை உணர்ந்தேன். இன்னும் சொல்லப் போனால் எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அங்கு இருந்த ஸ்ரீதர் என்ற பயிற்சியாளர் மட்டும் தான் என்னுடன் தமிழில் பேசி எனக்கு உதவினார். அப்போது சேவாக்கும் எனக்கு துணையாக நின்றார். இந்தி தெரியவில்லை என்பதால் நான் சோர்ந்து போகவில்லை. எனவே மாணவர்கள் இளம்பருவத்திலே பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடராஜன் கூறியிருக்கிறார். நடராஜனில் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பாராட்டை பெற்று வருகிறது!

Exit mobile version