ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் இந்தியா தோற்றத்தை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். பாகிஸ்தான் வெற்றிக்கு திமுக நிர்வாகிகளும் ஆனந்தம் கொண்டார்கள்.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தான் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய விஷயம் குறித்து வீரேந்திர சேவாக் தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் கருத்துதெரிவித்துள்ளார்.
டெல்லியில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பட்டாசு வெடிப்பதில் தடை இருக்கிறது, ஆனால் நேற்று பாகிஸ்தான் வென்றதை ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். இது எப்படி, தீபாவளிப் பண்டிகை அன்று தடை விதிக்கப்பட்ட பட்டாசு நேற்று எப்படி வெடிக்க முடியும் என்ற ரீதியில் சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார், அதாவது நேற்று பட்டாசு வெடிக்க முடியும் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாட முடியும் என்றால் தீபாவளியன்று ஏன் பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற ரீதியில் சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார். தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் என்ன தீங்கு வந்து விடும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.