தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இளைஞரணி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகின்றார்.இதன் ஒருபகுதியாக இன்று இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க சென்ற அவரை வரவேற்க்க 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள் வந்தால் இராமநாதபுரமே ஸ்தம்பித்து நின்றது.இதனிடையே பாஜக இளைஞரணி யினருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தது.
இதனை கண்ட திராவிட கட்சியினர் எப்படி இந்த நேரத்தில் இவர்கள் இத்தனை நபர்கள் வந்தார்கள் என்று கலக்கம் அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட பாஜக இளைஞரணி கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி.செல்வம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்தார்.மேலும் நிர்வாகிகளிடம் பேசும் போது அனல் பறந்தது திமுகவை ஒரு கை பார்த்துவிட்டார். அவர் பேசியதாவது :
2021 தேர்தலை முடிவு செய்யும் சக்தியாக பா.ஜ.க இருக்கும் எனவும் . 12 கோடி தொண்டர்களையும், 300 எம்.பிக்கயும் கொண்ட உலகில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது என கூறினார். மேலும் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்துக்கு துணை நின்ற திமுகவை வரும் தேர்தலில் பாஜக வதம் செய்ய வேண்டும். 2021 தேர்தலில் புனித ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடி பறக்கும் வகையில் இளைஞரணி தொண்டர்கள் செயல்பட வேண்டும் எனப் பேசினார்.
ஆலோசனை கூட்டத்திற்கு முன் அவர் செய்தியாளர்களிடம்பேசியதாவது , கடந்த ஆக 31-ல் பாஜக இளைஞரணியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட தீர்மானத்தின்படி செப் 13-ம் தேதி நீட் தேர்வு எழுதும் பேருந்து வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு பாஜக சார்பில் இலவச போக்குவரத்து வசதி செய்யப்படும்.இதற்கான உதவி தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டு செப்.11 மாலை 6 மணி வரை மாணவர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழி கொள்கை விசயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. ஆனால் திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிகள் கற்றுத்தரப்படுகிறது.ஆனால் ஏழை மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் இரட்டை மொழி கற்றுத்தரப்படுகிறது. 2016 தேர்தலைவிட 2021- தேர்தலில் மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கும். புதிதாக சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தகுதியானவர் என்பதால் மாநில துணைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.