கேரளாவில் சரியும் நிலத்திற்குள் புதையும் உயிர்கள் ! வயநாடா ? பயநாடா ?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலமான இந்த மாதங்களில் அடிக்கடி நிலச்சரிவு சம்பவங்களும் நடப்பது தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் 2006 முதல் இதுவரை ஏராளமான நிலச்சரிவுகளை வயநாடு கண்டிருக்கிறது. அதில் 10 நிலச்சரிவுகள் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2018ல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 12 பேரும், 2019ல் 17 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பேர் நிலச்சரிவின் போது காணாமல் போய் இதுவரை கிடைக்கவில்லை.

தற்போது மீண்டும் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டிருந்தாலும், ஏராளமான வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வயநாடு மாவட்டத்தில் மழைக்காலம் வந்தாலே மக்கள் பயத்துடன் நாட்களை கடந்து வரும் பரிதாப நிலையில் உள்ளனர். இந்திய ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்டோருடன் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Exit mobile version