தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தோற்று வேகமாக அதிகரித்து வருகிறது. சீனையிலும் அதன் வீரியம் அதிகமாகியுள்ளது. சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு கடந்த ஜூன் 19ம் தேதி வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது.
இதேபோல் தமிழ்கத்தில் மதுரை செங்கற்பட்டு காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் ஊரடங்கு கடைபிடித்து வருவது குறிப்பித்தக்கது. மேலும் மண்டலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு நாளை நிறைவடைய உள்ள நிலையில் நோய் பரவல் இன்னமும் குறையவில்லை
இந்தநிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனைகள் வழங்க மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஒவ்வொரு முறையும் ஊரடங்கை நீட்டிபது குறித்து அரசிற்கு ஆலோசனைகளை வழங்கும். தமிழாக முதல்வர் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார்.
.சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டம் முடிந்த பின் ஊரடங்கு குறித்து அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது. ஜூலை மாதம் இறுதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படலாம் என செய்திகள் வருகின்றது. மேலும் தமிழகத்தில் கொரோனா டெஸ்ட் அதிகம் செய்யப்படுவதால் கொரோனவை விரைவில் கட்டுப்படுத்திவிடலாம் என சுகாதார துறை அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது.