மகாராஷ்டிராவில் மே 3 ம் தேதி ஒலிபெருக்கி அகற்றும் போராட்டம்! மே 5-ல்ராஜ்தாக்கரே-யோகி சந்திப்பு!

ஔரங்கபாத்தில் வருகின்ற மே 1 ம் தேதி ராஜ்தாக்கரே நடத்த இருக்கும்பேரணிக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்து இருக்கிறது.இருந்தாலும் கடந்த சில தினங்களாகவே ஔரங்கபாத்தில் 144 தடை உத்த ரவை அமல்படுத்தி இருக்கிறது மகாராஷ்டிரா அரசு.இதனால் மே-1 ம் தேதி ஔரங்கபாத்தில் ராஜ்தாக்கரே வின் பேரணிக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்? என்று காண மகராஷ்டிரா மக்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள் அடுத்து மே 3 ம் தேதி நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒலிபெருக்கி அகற்றும் போராட்டம் இதற்கு பிறகு மே 5ல் அயோத்தி செல்கிறார் ராஜ்தாக்கரே.அயோத்தியில் ராம பிரானை சந் தித்த பிறகு உத்தர பிரதேச முதல்வர்யோகியை சந்திக்க இருக்கிறார் யோகி.

யோகியை ராஜ்தாக்கரே சந்தித்த பிறகு மகாராஷ்டிராவில் இனி வருகின்றகாலங்களில் பிஜேபி எம்என்எஸ் இணைந்து உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போராட்டத்தில் கை கோர்த்துசெயல்படுவார்கள் என்று தெரிகிறது.இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் பிஜேபி மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவுடன் தேர்தல் கூட்டணி வைப்பதற்கு ஆர்எஸ்எஸ் க்ரீன் சிக்னல் அளித்து விட்டதாக நாக்பூர் செய்திகள் கூறுகின்றன
.
ராஜ்தாக்கரே மகாராஷ்டிரா அரசியலில் சரியாக கையாளப்படாத ஒரு போர் வாள் என்றே கூறலாம் சிவசேனாவி ல் இருந்து விலகி 2006 ல் மகாராஷ்டி ரா நவநிர்மான் சேனாவை ஆரம்பித்த ராஜ்தாக்கரே சந்தித்த முதல் தேர்தல் 2009 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.அந்த தேர்தலில் எம்என்எஸ் 13 சட்டம ன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது.

சுமார் 30 சட்டமன்ற தொகு திகளில் 2 வது இடத்தில் இருந்தது மும்பையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 6 தொகுதிகளில் எம்என்எஸ் தான் ஜெயித்து இருந்தது பிஜேபி சிவசேனா காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் என்று இரண்டு மிகப்பெரிய அரசியல் கூட்டணிகளை எதிர்த்து ஒரு சிறிய அரசியல் கட்சி தனி யாக போட்டியிட்டு 13 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது என்றால் ராஜ்தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா மக்களிடம் உள்ள செல்வாக்கை அறிந்து கொள்ளலாம்.

2012 மும்பை கார்ப்பரேசன் தேர்தலில் வெற்றி பெற்ற 227 கவுன்சிலர்களில் 27 கவுன்சிலர்கள் மகாராஸ்டிரா நவநிர்மான் சேனாவை சார்ந்தவர்கள் தான் அது மட்டுமல்லாமல் புனே நாக்பூர் தானே என்று பல மாநகராட்சிகளில் சுமார் 30-40 கவுன்சிலர்கள் எம்என்எஸ் சார்பாக வெற்றி பெற்று இருந்தார்கள், ராஜ்தாக்கரேயின் அரசியல் வளர்ச்சியை பிஜேபி தான் முடக்கியது என்று உறுதியாக கூறலாம்.

2014 ல் மகாராஷ்டிரா அரசியலில் வீசிய மோடி அலையினால் கூட்டணியில் இருந்த சிவசேனாவுக்கு ஜாக்பாக்ட் கிடைக்க எம்என்எஸ்க்கு தோல்வி துவங்கியது அதற்கு பிறகு மகாராஷ்டிராவில் பிஜேபி சிவசேனா கூட்டணி ஆட்சி அ மைந்ததும் உத்தவ் தாக்கரே எம்என் எஸ் கட்சியில் இருந்து பல தலைவர்களை சிவசேனாவுக்கு இழுத்து விட்டார்.

2014 லோக்சபா தேர்தலில் பிஜேபி சிவசேனாவை கழற்றி விட்டு இருந்தால் இப்பொழுது மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனா இருக்கும் இடத்தில் நவநிர்மான் சேனா தான் இருந்து இருக்கும்.அரசியல் வனவாசம் முடிந்து இதோ ராஜ்தாக்கரே மீண்டும் மகாராஷ்டிரா அரசியலில் வெற்றி கொடி நாட்ட வருகிறார். ஆச்சரியம் என்னவென்றால் எந்த பிஜேபியினால் ராஜ்தாக்கரே அரசியல் வனவாசம் சென்றாரோஅதே பிஜேபி இப்பொழுது ராஜ்தாக்கரேவை கூட்டணி தோழனாக்கி மீண்டும் மகாராஷ்டிரா அரசியலில் வலம் வர வைக்க இருக்கிறது.ராஜ்தாக்கரே என்கிற போர்வாளை பிஜேபி எப்படி சுழற்றுகிறது என்பதை பொறுத்தே ராஜ்தாக்கரேவின்

Exit mobile version