தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு முறையே 5 மற்றும் 10 ரூபாய் குறைத்ததை அடுத்து, பாரதிய ஜனதா கட்சி ஆளும் 10 மாநிலங்கள் உட்பட 13 மாநில அரசுகள், ‘வாட்’ எனப்படும் மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளது, இதனால் பா.ஜ.க ஆளும் மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் பெட்ரோல் – டீசல் விலையில் கூடுதல் சலுகையை நேற்று அறிவித்தன.இதையடுத்து, தமிழகத்திலும் வரி குறைப்பு அமலுக்கு வருமா’ என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தீபாவளிதிருநாளையொட்டி, விமான வேகத்தில் ஏறி கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலையை ஜெட் வேகத்தில் குறைத்துள்ளது மத்திய அரசு. விலை குறைப்பிற்கான அறிவிப்பினை மத்திய அரசு நேற்று முன் தினம் அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி, 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி, 10 ரூபாயும் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. கலால் வரி குறைப்பால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
மேலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை மேலும் குறைக்க, மாநில அரசுகள், ‘வாட்’ எனப்படும், மதிப்பு கூட்டு வரியை குறைத்து நடவடிக்கை எடுங்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து, பா.ஜ.க ஆட்சியில் உள்ள அசாம், திரிபுரா, மணிப்பூர், கர்நாடகா, கோவா, உத்தர பிரதேசம், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான, ‘வாட்’ வரி அதிரடியாக நேற்று குறைக்கப்பட்டது.
இவை தவிர, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு பீஹாரிலும், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்., காங்.,- பா.ஜ., அரசு புதுச்சேரியிலும், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள அரசு ஒடிசாவிலும், வாட் வரி குறைப்பை அறிவித்துள்ளன. மாநில அரசுகளின் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.அசாம், திரிபுரா, மணிப்பூர், கர்நாடகா மற்றும் கோவாவில், மத்திய அரசின் வரி குறைப்பு போக பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் கூடுதலாக குறைக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு விபரம்:
மத்திய பா.ஜ.க அரசு: பெட்ரோல் – ₹5, டீசல் – ₹10
உத்திர பிரதேச பா.ஜ.க அரசு: ₹12 & ₹12
கர்நாடகா பா.ஜ.க அரசு: ₹7 & ₹7
கோவா பா.ஜ.க அரசு: ₹7 & ₹7
அஸ்ஸாம் பா.ஜ.க அரசு: ₹7 & ₹7
திரிபுரா பா.ஜ.க அரசு: ₹7 & ₹7
உத்திராகண்ட் பா.ஜ.க அரசு: ₹2 & ₹2
விடியல் தி.மு.க அரசு – 0
தமிழக விடியல் அரசு டீசல் மீது 21.85 ரூபாய், பெட்ரோல் மீது 28 ரூபாய் வாட் வரி வசூலிக்கிறது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, பெட்ரோலுக்கு 5 ரூபாய், டீசலுக்கு 4 ரூபாய் விலை குறைக்கப்படும் என்று தி.மு.க., தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பெட்ரோலுக்கு மட்டும் 3 ரூபாய் குறைத்த நிலையில், டீசல் விலையை கண்டுகொள்ளவில்லை. எனவே, தற்போதாவது பெட்ரோல், டீசல் விலையை, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தமிழக அரசு குறைக்க வேண்டும். என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.