வட மாநில தலைவர்கள் ஸ்டாலின் அவர்கள் வீட்டிற்கு வந்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எந்த மொழியில் பேசுவார்கள்? என்பதை திருமதி கனிமொழி விளக்குவாரா……
திமுக எம்பி கனிமொழி அவர்கள் நேற்று விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரி பேசும்போது எனக்கு இந்தி தெரியாது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறினார். அந்த அதிகாரிகள் நீங்கள் இந்தியர் தானே என்று கேட்டார்.இந்தி மொழி தெரிந்தால்தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன், என்று கேட்டு அங்கிருந்து வெறியேறிவிட்டார்.
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ,இப்ப இருக்கக்கூடிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கரின் சகோதரியுமான திருமதி கனிமொழி ,1989 யில் சென்னை கடற்கரையில் ஒரு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அன்றைய துணை பிரதமர் தேவிலால் ஹிந்தியில் பேசும்போது மொழி பெயர்ந்தது யார்? அவர்களுடைய நண்பர் ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது டெல்லியில் பத்திரிகையாளர் ஹிந்தியில் கேள்வி கேட்கும்போது ஆ.ராசா ஆங்கிலத்தில் பதில் சொன்னார்.
இந்தி தெரியாத ஒருவர் எப்படி கேள்வியை புரிந்து கொண்டு ஆங்கிலத்தில் பதில் கூற முடியும்? என்பதை ஆ.ராசாவிடம் கேட்டறிந்து திருமதி கனிமொழிஅவர்கள் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ,படித்தவர் உங்களுக்கு ஹிந்தி நல்லா தெரியும் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் ஏன் திகார் சிறையில் இருந்த வார்டனுக்கும் தெரியும் . கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் தமிழே பேசுறதே இல்லை என்பதுதான் உண்மை. ஏன் உங்களுக்கு இந்த பொய் ,பித்தலாட்டம் .
திமுக செயலாளர் துரைமுருகன் அவருடைய மகன் கதிர்ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டபோது கதிர்ஆனந்த் மனைவி என் கணவருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று இந்தியில் பேசி வாக்கு சேகரித்தார் . திண்டுக்கல் கந்துவட்டி பைனான்ஸ் வேலுசாமி அவர்கள் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் ஹிந்தி மொழியில் பேசி வாக்கு சேகரித்தார்.
இது தமிழர்களை ஏமாற்றும் வேலை தான ,திருமதி கனிமொழி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? வட மாநிலத்திலிருந்து வரம் அரசியல் கட்சி தலைவர்கள் உங்கள் வீட்டுக்கு வரும்போதும் ,இவ்வளவு ஏன் காங்கிரஸ் கட்சினுடைய முக்கிய தலைவர் ராகுல் காந்தி அவர்கள் , திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு வந்தபோது உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் எந்த மொழியில் பேசினார்கள்? என்பதை திருமதி கனிமொழி விளக்கி சொல்ல உங்களால் முடியுமா ?
மற்ற மொழிகளும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது மாணவர்கள் , மக்கள் விருப்பம் அதை தடுக்க எந்த ஒரு அதிகாரமும் திமுகவிற்கு கிடையாது. திமுகவினர் நடத்தக்கூடிய பள்ளிகளில் எத்தனை மொழி கல்வி திட்டம் இருக்கிறது ?இரு மொழி கல்வியா, மும்மொழி கல்வியா…..மக்கள் விரோத திமுக ஊரை ஏமாற்றுவதற்கு இந்தி மொழி வேண்டாம் என்று உபதேசம் செய்வது ,இனம் ,மொழியை வைத்து அரசியில் செய்வதை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.