மேக் இன் இந்திய திட்டத்தின் பலன்கள் இதோ!கிண்டலடித்தவர்கள் எங்கே?

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு ஆயுத தயாரிப்பில் காணும் முன்னேற்றங்கள்.

மோடி அரசு செய்த பல சீர் திருத்தங்கள் பலனளிக்க தொடங்கிவிட்டன, முதற்கட்டமாக மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்திய ராணுவ தயாரிப்பு தனியாருக்கு கொடுக்கபட்டதன் பலனாக முதல் தனியார் ஆயுதமாக பினாகா ராக்கெட்டுகள் வெற்றிகரமாக சோதிக்கபட்டிருக்கின்றன‌

பினாகா என்பது மல்டிபேரல் லாஞ்சர் அதாவது பல்குழல் பீரங்கியில் பொருத்தபடும் ராக்கெட்டுகள் தொடர்ச்சியாக அவை ஏவபட்டு எதிரிக்கி நெருக்கடி ஏற்படுத்தும், இன்றைய கால தரைபடையில் இவை அவசியம், இதுகாலம் ரஷ்யாவிடம் இருந்தே பெறபட்டது

இப்பொழுது மத்திய அரசு இந்தியாவிலே ஆயுதம் செய்யபடும் என அறிவித்த பின் Economic Explosive Limited (EEL) எனும் நிறுவணம் அதை தயாரித்து கொடுத்துள்ளது, விஷயம் மாபெரும் வெற்றி

இதன் தொழில்நுட்பம் இந்திய அரசுடையது, வடிவமைப்பு மற்றும் இதர பணிகளை செய்தது

இதை தொடர்ந்து தனியார் ( ( Kalyani Group and Tata Power SED) பீரங்கிகளும் விரைவில் சோதிக்கபடும் என்கின்றார்கள் , டாடா ஏற்கனவே இலகு ரக ஹெலிகாப்டர் தயாரிப்பில் இருக்கின்றது

இந்திய விண்வெளி நிலையம் தனியாருக்கு திறந்துவிட பட்டதில் இந்தியாவின் தனியார் செயற்கை கோள் சோதனைகளை இஸ்ரோ நடத்தும் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது, இதனால் இனி இந்திய தனியார் செயற்கைகோள்கள், ஏவும் வாகனங்கள் போன்றவை களத்துக்கு வரும்

ஆக மோடியின் சில சீர்த்திருத்தங்கள் மிக சரியாக வேலை செய்ய தொடங்கிவிட்டன இதனால் இனி இந்தியாவில் தொழில் பெருகும் அதைவிட முக்கியம் அன்னிய நாட்டுக்கு பணம் செல்லாது இதனால் இந்தியாவில் பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் மேம்படும்

2025ல் இந்தியா ஆயுதம் ஏற்றுமதி செய்யும் நாடு எனும் நிலையினை எட்ட இது வழிவகை செய்யும்

விரைவில் இந்திய தனியார் ராக்கெட்டுகளும் செயற்கை கோள்களும் பறக்க போகின்றன, அப்படியே இந்திய ராணுவம் இந்திய தயாரிப்புடன் களத்தில் நிற்க போகின்றது

இந்தியா மிக வேகமாக மாறுகின்றது, இந்த மாற்றத்தை கொடுத்தது மோடி என்பது ஒவ்வொரு இந்தியனும் மனதில் நிறுத்தவேண்டிய ஒன்று

கட்டுரை:- வலதுசாரி எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version