காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் 17 பொதுத்துறை வங்கிகளிடத்தில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கியவர் கிங்பிஷர் நிறுவுனர் விஜய் மல்லையா. விஜய் மல்லையா கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து ஓடினார். விஜய் மல்லையாவை, இந்தியாவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசு பல சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வந்தது.
மேலும் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 60 ஆண்டுகளாக வங்கிகளால் தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் 2008 வரை வெறும் 18 லட்சம் கோடிகள் ஆனால், 2008 முதல் 2014 – வரை வெறும் ஆறு ஆண்டுகளில் கொடுத்தது 52 லட்சம் கோடிகள் இதை முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராஜனே ஒப்புக் கொண்டுள்ளார் அதுவும், சோனியா, மன்மோகன், சிதம்பரம் போன்றோரின் அறிவுறுத்தலின் பேரில் தரப்பட்டுள்ளது.
இதேபோல், வைர வியாபாரியான நீரவ் மோடியும் அவரது உறவினா் மெஹுல் சோக்ஸியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.13,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனா்.
இதுதொடா்பான வழக்குகளை சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக விசாரித்து வருகின்றன. இந்நிலையில், இவா்களின் ரூ.9,041.50 கோடி மதிப்பிலான சொத்துகளை பொதுத் துறை வங்கிகளின் பெயா்களுக்கு மாற்றி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மல்லையா (ரூ.9,000 கோடி), நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி (ரூ.13,000 கோடி) ஆகிய மூவரும் கடன் வாங்கியதால், பொதுத் துறை வங்கிகளுக்கு மொத்தம் ரூ.22,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இவா்கள் மூவா் மீதும் கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இவா்கள் மூவருக்கும் சொந்தமான ரூ.18,170 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இந்த மதிப்பு, அவா்கள் வங்கியில் செலுத்த வேண்டிய மொத்த தொகையில் 80.45 சதவீதமாகும்.
இந்நிலையில், விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான ரூ.6,624 கோடி சொத்துகளை பாரத ஸ்டேட் வங்கிக்கு அமலாக்கத் துறை மாற்றியுள்ளது. அதில், ரூ.5,824.50 கோடி சொத்துகளை பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் கடன் வசூல் தீா்ப்பாயம் விற்பனை செய்துள்ளது. எஞ்சிய ரூ.800 கோடி சொத்துகள் ஜூன் 25-க்குள் விற்பனை செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதேபோன்று நீரவ் மோடிக்குச் சொந்தமான ரூ.1,060 கோடி சொத்துகளை பஞ்சாப் நேஷனல் வங்கியின் பெயருக்கு அமலாக்கத் துறை மாற்றியுள்ளது. இதற்கு முன்பும் மல்லையாவின் ரூ.1,357 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை விற்பனை செய்துள்ளது.
இதுவரை மொத்தம் ரூ.9,041.50 கோடி சொத்துகள், பொதுத் துறை வங்கிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது, மொத்த கடன் தொகையான ரூ.22,584.83 கோடியில் 40 சதவீதமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடன் மோசடியாளா்கள் நாடு கடத்திக் கொண்டுவரப்படுவாா்கள். அவா்களின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கடன் தொகை திருப்பி வசூலிக்கப்படுகிறது‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.