மம்தாவின் அலட்சியம் செவிலியர்கள் ராஜினாமா! பேராபத்தில் மேற்குவங்கம்!

மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு பல உண்மைகள் மறைக்கப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அங்கு தற்போதைய நிலைமை மோசமாக இருக்கிறது. ஏன் இந்த அலட்சிய போக்கு என பார்த்தால் அங்கும் ஓட்டு அரசியலால் தான் இந்த நிலைமை. சில சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று மம்தா கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில் தாராளம் காட்டி வருகின்றது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவமனையில் தேவையான பரிசோதனைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுந்து வருகின்றது . சரி மேற்கு வங்கத்தில் நிலைமையைக் கண்டறிய மத்திய அரசால் அனுப்பப்பட்ட மத்தியக் குழுவுக்கும் மம்தா அரசு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மத்திய குழு மேற்கு வங்கம் வந்தநிலையில் அன்று மட்டும் கொல்கத்தாவிலும், வடக்கு வங்கத்திலும் பரிசோதனையை அதிகப்படுத்தினார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

கொரோனா அதிக பாதிப்புள்ள மாநிலங்களில் 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களாக பிற மாநிலங்களை சேர்ந்தவர்களே பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் வரை பணிசெய்து வருகிறார்கள் . மணிப்பூர் மட்டுமல்ல கேரளாவை சேர்ந்த செவிலியர்களும் மேற்குவங்கத்தில் அதிகம் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் பின்னடைவாக, செவிலியர்கள் பலர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில் மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த சூழலில், ஒரே நாளில் அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு சொந்து ஊருக்கு சென்று விட்டனர்.

இதேபோன்று பிற வடகிழக்கு மாநில செவிலியர்களும் மற்றும் ஒடிசாவை சேர்ந்த செவிலியர்களும் ராஜினாமா செய்ய கூடும் என கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு நெருக்கடியில் மேற்கு வங்கத்தில் செவிலியர்களின் ராஜினாமா செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. செவிலியர்கள் ராஜினாமா செய்வதால் கொரோனா சிகிச்சை அளிப்பதில் இன்னும் பெரும் பின்னடைவு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.

மகன் இறந்தாலும் பரவாயில்லை.மருமகள் விதவையாக வேண்டும் என்பதைப் போல, தன் மாநில மக்கள் இறந்தாலும் பரவாயில்லை,மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று கர்வம் கொண்டு அலைகிறார் மம்தா பானார்ஜி.

ஊற்றுக்கண்ணில் இருந்து உபநதிகள் உற்பத்தியாகி ஓடி வருவது போல ‘கர்வம்’ என்ற ஊற்றுக்கண்ணில் இருந்து தான் ஆணவம், அகம்பாவம், இறுமாப்பு, தலைக் கனம், பெருமை, மமதை என்கின்ற அத்தனை கெட்ட குணங்களும் மனித உள்ளங்களில் உற்பத்தியாகிறது.அவை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வெளிப்பட்டு மனிதனை தவறான வழியில் நடக்கச்செய்து பாவம் என்ற படுகுழியில் தள்ளும்.இது எத்தனை உண்மை என்பதை, வருகின்றமேற்கு வங்க தேர்தலின் முடிவு வெளிபடுத்தும்.

Exit mobile version