மம்தாவின் முதல்வர் பதவி காலி ? இதுதான் அமித்ஷாவின் திட்டமா ?

நந்திகிராமில் சுவேந்து அதிகாரியிடம் 1956 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியின் வெற்றி செல்லாது மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிசனுக்கு உத்தரவிட கொல்கத்தா ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

ஆரம்பத்தில் தேர்தல் கமிசனை நந்திகிராம் தேர்தல் முடிவுகள் பற்றி முழுவிவரம் மற்றும் வாக்குப்பெட்டிகள் அனைத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டு இருந்தது.இதனால் மம்தா பானர்ஜி மிகவும் சந்தோஷத்தில் இருந்தார்.

எப்படியாவது மறுவாக்கு எண்ணிக்கையில் கோல்மால் செய்து வெற்றி பெற்றதாக அறிவிக்க வைத்து முதல்வர் பதவியை தக்கவைத்து கொள்ளலாம் என்று கனவில் இருந்தார்.ஆனால் கொல்கத்தா உயர்நீதி மன்றம் இந்த வழக்கை இன்று நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்து மம்தா பானர்ஜியின் கனவில் மண்ணை அள்ளி வீசி இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்த மம்தா பானர்ஜிஅரசியல் சாசனம் வழங்கியுள்ள MLA ,MLC இல்லாமல் முதல் அமைச்சரவாகவோ இல்லை அமைச்சராகவோ பதவிஏற்று 6 மாதம் வரை பதவியில் இருக்கலாம் என்கிற சலுகையை பயன் படுத்திமுதல்வர் பதவியில் இருக்கிறார்.

வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் மம்தா பானர்ஜி ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்வாக தேர்வானால் தான் அவர் முதல்வர் பதவியில் தொடர்ந்து இருக்க முடியும்.

மம்தா பானர்ஜியும் பவானிபூர் தொகுதி திரிணாமுல்காங்கிரஸ் எம்எல்ஏவாக வெற்றி பெற்று இருந்த சோபன்தேவ் சட்டோபாத்யாயை ராஜினாமா செய்ய வைத்து விட்டு அங்கு இடைத்தேர்தலில் போட்டியிட இருந்தார் ஆனால் தேர்தல் கமிஷனோ கொரானாவை காரணம் காட்டி இப்போதைக்கு பவானிபூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தாது என்றே தெரிகிறது வருகின்ற அக்டோபர் இறுதிக்குள் பவானிப்பூரில் இடைத்தேர்தல் நடை பெற்று மம்தா பானர்ஜி அதில் வெற்றி பெற்றால் தான் முதலமைச்சராக தொடர்ந்து இருக்க முடியும்.

இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே தெரிகிறது அனேகமாக அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தலுடன் பவானிப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் நடைபெறலாம்.

ஒரு வேளை செப்டம்பர் இறுதிக்குள்பவானிபூரில் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்றால் நவம்பர் 4ல் மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தே தீர வேண்டும். இது கடவுள் அவருக்கு அளிக்கும் தண்டனையாகும்.

மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் இருந்து விலகி வேறு ஒருவரை டம்மியாகவைத்து ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியை நடத்த நினைத்தாலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக விடாது மம்தா முதல்வராக இருந்த பொழுதே கடந்த சில வருடங்களாக திரிணாமுல் காங்கிரசை உடைத்த பிஜேபியினால் மம்தா முதல்வராக இல்லையென்றால் மிக சுலபமாக திரிணாமுல் காங்கிரசை உடைக்க முடியும்.

75 எம்எல்ஏக்கள் பிஜேபியிடம் இருக்கிறது அதனால் மம்தா பானர்ஜியின் ஆட்சியை எந்த வழியிலாது காலி செய்ய திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக காத்து இருக்கிறது.அரசியலில் எதுவும் சத்தியம்.

கட்டுரை:-வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version