நுபுர் சர்மாவுக்கு ஆதரவு பதிவு : தையல் தொழிலாளி தலை துண்டிக்கப்பட்டு கொடூர கொலை ! வீடியோ வெளியிட்டு மிரட்டல் !

ராஜஸ்தான்: பா.ஜ.க விலிருந்து தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவைப் பகிர்ந்ததற்காக தையல் கடையில் வேலை செய்தது வந்த கன்ஹையா லால் தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது .

உதய்பூரின் மால்தாஸ் தெரு பகுதியில் கடை தையல் கடையில் வேலை செய்து வந்தவர் கன்ஹையா லால் இவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்துக்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார், இந்தநிலையில் இன்று கன்ஹையா லால் வேலை செய்யும் துணிக்கடைக்கு வந்த முகமது ரியாஸ் அக்தர் மற்றும் முகமது கோஷ் ஆகியோர் துணி தைக்க வந்தது போல் நடித்து வீடியோ எடுத்து கொண்டே பட்டா கன்ஹையா லால்யைதாங்கள் கொண்டுவந்த பட்டா கத்தியால் தலையை துண்டித்துள்ளார்கள்.பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது – முகமது ரியாஸ் அக்தர் மற்றும் முகமது கோஷ் ஆகியோர் கசாப்புக் கத்தியை கையில் வைத்திருந்து கொலைக்கு நாங்கள் தான் காரணம் எனவும் யாரேனும் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு அளித்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் என எச்சரிக்கும் விதமாக அந்த் வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

உதய்பூரில் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மக்கள் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். இச்சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மால்டாஸ் தெரு பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் வெட்கக்கேடானது என்று கூறிய முதல்வர் அசோக் கெலாட், அனைத்து மதத்தினரும் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். “உதய்பூரில் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரையும் அமைதி காக்குமாறும், செயலின் வீடியோவைப் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன், என ராஜஸ்தான் கெஹ்லாட் கூறியுள்ளார்.

source:- Hindustan Times.

Exit mobile version