மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழா கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு வெகுவிமரிசையாக அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது
நேற்று இரவு சுமார் 7 மணியளவில் தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பு பலூன்களுக்கு நிரப்பப்படும் ஹீலியம் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறி உள்ளது
ஹீலியம் சிலிண்டர் வெடித்த போது மிகப்பெரிய சத்தம் அந்த பகுதியில் கேட்டு அருகில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்
இந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தின் போது அப்பகுதியில் இருந்த சிலர் கை கால்கள் சிதைந்த நிலையில் கதறல் சத்தத்துடன் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்
தொடர்ந்து அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்
ஆற்றுத் திருவிழாவில் இதுபோன்ற ஒரு கோர சம்பவம் நடைபெற்றது குறித்து தகவல் அறிந்து முதல் ஆளாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்
மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் மற்றும் விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு ஆகியோர் அடுத்தடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விபத்து குறித்து கேட்டறிந்தனர்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் இதுவரை கலா என்ற ஒருவர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும் இதுவரை 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பேட்டியளித்தார்
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை தீவிரபடுத்தப்பட்டது
மேலும் அந்த பகுதியில் இருந்த மற்றொரு ஹீலியம் சிலிண்டரில் இருந்து தீயணைப்புத்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் ஹீலியம் வாயு முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது
மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு நேரில் விபத்து நடைபெற்ற இடத்தில் பார்வையிட்டு விபத்து குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்
தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விபரங்கள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தனர்
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 18 பேரும் திருவண்ணாமலை மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சையில் உள்ளவர்களின் விபரங்கள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது
ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு காரணமான பலூன் கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
