ஜெய்பீம் திரைப்படம் ம் தற்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது,.இவர்கள் ஜாதி சண்டையை தூண்டும் விதமாக எடுக்கப்பட்டுள்ள படம் இந்த ஜெய் பீம் என தற்போது தெரியவந்துள்ளது. மேலும் திட்டமிட்டு பார்வதியை ஏமாற்றி உள்ளார்கள். பாமர மக்களின் வாழ்க்கையை எடுத்து அதில் பணம் சம்பாதிக்கும் வழியினை சூர்யா மற்றும் பல இயக்குனர்கள் தற்போது கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான மாரிதாஸ் இது குறித்து அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் பின்வருமாறு :-
ஒரு நபரின் விவகாரத்தை அவர் அனுமதியோடு உரிமை பங்கீட்டுக்கான ஒப்பந்தத்தோடு படமெடுப்பர். இது உலகம் முழுவதும் இருக்கும் பொது நடைமுறை. பிரபலமான நபர் என்றால் கூட unauthorized என்று தான் எடுக்க முடியும். அனுமதி அவசியம்.ஆனால் ஜெய்பீம் சூரியா குழு அதைச் செய்யவில்லை. இன்று சூர்யா அமேசான் பல கோடி லாபம். அதில் பார்வதிக்கான உரிமை? 40கோடி லாபத்தில் 4 கோடியாது பார்வதிக்கு உரிமை உண்டு தானே! அந்த உரிமையைத் தட்டிப் பறிக்கவே பார்வதி செங்கேணி எனப் பெயர் மாற்றி சட்டச் சிக்கலை உருவாக்கிக் கொண்டது படக்குழு. இது எதார்த்தமாக நடந்தது அல்ல நிச்சயம் படக்குழு இதைத் திட்டமிட்டே செய்துள்ளது என்பேன்.
டெண்டுல்கர் ஆரம்பித்து எந்த பிரபலத்தையாவது authorized என்று உரிமை வாங்காமல் படமெடுத்தால் என்ன நடக்கும் இங்கே? சட்ட நடவடிக்கையை எதிர் கொள்ள வேண்டி வரும். சரிதானே! ஆனால் பாவி பார்வதி? அவர் இன்றும் குடிசை வீட்டில் தினமும் போராடி வாழ்கிறாள் அவள் எப்படி முடியும்!
“சட்ட விவரமறியாத,சண்டை போடச் சக்தியில்லாத மக்களை யாரும் ஏமாற்றலாம்”! ஜெய் பீம் கடந்த 5 ஆண்டுகள் முன் கூட நடந்து வரும் ஒரு மேசமான சமூக குற்றத்தை அதிகார வர்க்கத்தின் கொடூரமான முகத்தைக் காட்டுவதோடு வலியை மக்களிடம் கடத்தியுள்ளது என்பது நிச்சயம் மகிழ்ச்சி. வரவேற்று கொண்டாடப் பட வேண்டிய படமே.
ஆனால் திரைக்குப் பின்னால் பணபலம் கொண்டவர்கள் மக்கள் உணர்வுகளை லாபம் சம்பாரித்ததோடு ஏமாற்றியும் உள்ளனர் என்றால் சூர்யா படக் குழுவும் இன்னொரு அந்தோணி தான்.மீண்டும் சொல்கிறேன்
“சட்ட விவரமறியாத,சண்டை போடச் சக்தியில்லாத மக்களை யாரும் ஏமாற்றலாம்”! இதை மடைமாற்ற ஜாதி சண்டையைத் தூண்டிவிட்டுள்ளனர் படக்குழுவினர். அதற்குக் கட்சிகள் ஆதரவு இயற்கை. இதனால் எங்கே இருந்து உரிமைக் குரல் வரவேண்டுமோ அங்கே இருந்து வராமல் தடுத்தும் உள்ளனர். சூர்யா படக்குழு புத்திசாலித்தனமான அந்தோணி.
பிரச்சனை அந்தோணியைக் குருமூர்த்தி என்று மாற்றியதும் , காலண்டர் மட்டும் அல்ல. வேறு ஒரு முக்கிய வேலையை ஜெய் பீம் குழு செய்துள்ளது. அது பார்வதி – செங்கேணி என மாற்றியது.பிரபலம் அல்லாத ஒரு நபரின் விவகாரத்தை அவர் அனுமதியோடு அவருக்கு உரிய உரிமை தொகையைப் பங்கீட்டுக்கான எந்த ஒப்பந்தமும் இல்லாமல் படமெடுத்து படக்குழு பெரும் லாபத்தை ஈட்டியுள்ளதோடு பார்வதியை ஏமாற்றியும் உள்ளது. சட்டப்படி இது குற்றம் அதில் தப்பிக்க பார்வதி செங்கேணி ஆனாள்
மாரிதாஸ்