கொரோனா பரவலை முன்வைத்து மதமோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை முன்வைத்து மாரிதாஸ் சமூக வலைதளங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். தமிழக அரசை விமர்சித்த இந்த பதிவுக்காக மாரிதாஸ் முதலில் கைது செய்யப்பட்டார்.மாரிதாஸ் மீண்டும் நெல்லை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி விவகாரத்தில் போர்ஜரி ஆவணங்கள் தயாரித்த வழக்கில் மீண்டும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். இதனிடையே மாரிதாஸ் மீதான முதல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்தது. ஆனால் போர்ஜரி ஆவணங்கள் தொடர்பான வழக்கில் மாரிதாஸ் தொடர்ந்து சிறையில் உள்ளார். இந்நிலையில் தற்போது மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மேலும் ஒரு வழக்கில் மாரிதாஸை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ ஒன்றில், இந்தியாவில் தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பினார்கள் என பேசியிருந்தார். இந்த பேச்சு, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டுகிறது; சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்படுத்துகிறது என நெல்லை மாவட்ட தமமுக தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
இதனடிப்படையில் நெல்லை மேலைப்பாளையம் போலீசார் இவ்வழக்கில் இன்று மாரிதாஸை கைது செய்தனர். இன்று கைது செய்யப்பட்டுள்ள மாரிதாஸ், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட இருக்கிறார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
தொடர்ந்து ஹிந்து மத ஆதரவலர்கள் மட்டும் குறிவைத்து கைது செய்வது திமுக அரசின் முக்கிய வேலையாக உள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டிவருகின்றனர்.