டெல்லி ஜி-20 மாநாடு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது. சீனா ரஷ்யா என்று அனைத்து நாடுகளும் டெல்லி பிரகடனத்தை ஏற்று கொண்டுள்ளதால் உலக அளவில் மோடியின் புகழ் மேன்மேலும் உயர்ந்து இருக்கிறது.
புதுடில்லி-தீர்க்கமான தலைமையுடன், உலகளாவிய தெற்கின் நலன் குறித்த குரலை, ‘ஜி – 20’ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரக்க வெளிப்படுத்தியதற்காக, பல்வேறு உலக தலைவர்களும் மனதார பாராட்டி உள்ளனர்.
கடந்த 2022 ல் இந்தோனேசி யாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் உக்ரைன் போரினால் ரஷ்யா மீது வைக்கப்பபட்ட கண்டனங்களை மோடி இந்த ஜி-20 மாநாட்டில் நீர்த்து போக வைத்து ரஷ்யாவின் ஆதரவை பெற்றார்.
ரஷ்யாவை வைத்தே சீனா வை வழிக்கு கொண்டு வந்தார்கள்.இதனால் சீனாவுக்கு எதிராக மத்திய ஆசியா மற்றும்ஐரோப்பாவில் இந்தியா உருவாக்க இருக்கும் எக்னாமிக் காரிடாரை ஜி-20 மாநாட்டின் மூலமாக சீனாவை ஏற்க வைத்து இருக்கிறார்கள். ஆப்ரிக்க நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு
கொண்டு வர நினைத்த மோடி ஆப்ரிக்க யூனியனை ஜி-20அமைப்பில் இணைக்க வைத்து புதிய அத்தியாயம் படைத்து விட்டார்.
இதனால் ஆப்ரிக்க யூனியன் அமைப்பில் உள்ள 55 நாடுகளும் இந்தியாவின் ஆதரவு நாடுகளாகி விட்டன. இதை விட மிக முக்கியமான விசயம் என்னவெனில் சீனாவின் ஒன் ரோடு ஒன் பெல்ட் திட்டத்தில் இணைந்து இருந்த இத்தாலி இப்பொழுது இந்தியா உருவாக்கும் ஐரோப்பி ய எகனாமிக் காரிடாரில்
இணையும் பொருட்டு சீனாவின் பெல்ட் & ரோடு திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித் து இருக்கிறது.
இது தாங்க மிகப்பெரிய வெற்றி .வளர்ந்த நாடுகளின் அமைப்பான ஜி-7 அமைப்பில் உள்ள நாடுகளான அமெரிக்கா இங்கிலாந்து கனடா பிரான்ஸ் ஜெர்மனி ஜப்பான் இத்தாலி ஆகிய 7 நாடுகளில் இத்தாலி மட்டுமே சீனாவின் ஒன் ரோடு ஒன் பெல்ட் திட்டத்தில் இணைந்து இருந்தது.
இத்தாலியை வைத்து மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒன் ரோடு ஒன் பெல்ட் திட்டத்தில் கொண்டு வர நினைத்து இருந்த சீனாவின் முயற்சியை முறியடிக்க அதே இத்தாலியை சீனாவின் ஒன் ரோடு ஒன் பெல்ட்
திட்டத்தில் இருந்து வெளியேற வைத்து சீனாவுக்கு செக் வைத்து இருக்கிறார் மோடி.
மோடியின் மாஸ்டர் பிளானான இந்தியா மத்திய ஆசியா ஐரோப்பா எகனாமிக் காரிடாரை இந்த ஜி-20 மாநாட்டில் கொண்டு வந்து அது சீனாவிற்கு ஆப்பு வைக்கும் என்று தெரிந்தும் அதனை சீனாவை
ஏற்க வைத்து ஜி-20 மாநாட் டை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறார்பிரதமர் மோடி.
திருப்பு முனை மாநாடு..
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:உக்ரைன் விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகளில் தங்கள் அணுகுமுறையை முன்னெடுத்துச் செல்வதில் இருந்து மேற்கத்திய நாடுகளைத் தடுப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றியது.
உலகில் நடக்கும் ராணுவ மோதல்கள் ஐ.நா., சாசனத்தின்படி தீர்க்கப்பட வேண்டும் என்றும், மேற்கத்திய சக்திகளால் அழுத்தம் கொடுக்க முடியாது என்ற செய்தியையும் உச்சி மாநாட்டின் பிரகடனம் தெளிவாக உணர்த்தி உள்ளது. இந்த உச்சி மாநாடு, பல்வேறு வழிகளில் திருப்புமுனை மாநாடாக அமைந்துள்ளது.
பல்வேறு பிரச்னைகளில் நாம் முன்னோக்கி செல்வதற்கான வழிகளை உருவாக்கி உள்ளது.இந்த மாநாட்டை அரசியலாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்ததற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.