நடிகர் மன்சூர் அலிகான், சென்னையில் புறம்போக்கு நிலத்தை ஆட்டைய போட்டு வீடுகட்டியுள்ளார்,இதனையறிந்த மாநகராட்சி நிர்வாகம் அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர்.
சுமார் 2500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடு கட்டியதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சூளைமேடு, பெரியார் பாதையில் 2500 சதுர அடி புறம்போக்கு நிலத்தை அபகரித்து வீடு கட்டிய மன்சூர் அலிகானின் வீடு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பிரதமர் மோடியை திருடன் என பேசிய மன்சூர் அலிகான் தானும் தான் சார்ந்த கட்சியும் மட்டுமே தூய்மையானவர்கள் போல சிலாகித்து பேசுவார். நல்லவனாக வெளியில் காட்டி கொண்ட மன்சூர் அலிகான் புறம்போக்கு நிலத்தை திருடியது கண்டுபிடிக்கபட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வில்லன் மட்டுமல்ல நிஜ வாழ்வில் அரசு நிலத்தினை திருடிய திருடனாக இருக்கிறார் மன்சூர் அலிகான், ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். நடிகராக மட்டுமல்ல, பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார், மேலும் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் மன்சூர் அலிகான்.
நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த பிறகு, கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 41 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.
மன்சூர் அலிகான் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை என்ற அளவுக்கு பல விவகாரங்களை செய்துள்ளார் இந்த பிரபல நடிகர். கொரோனா தடுப்பு மருந்து குறித்து அவதூறு பரப்பியதற்காகவும், நடிகர் விவேக் மரணம் குறித்து திரித்து சொன்னதாகவும் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கொரோனா என்பது இல்லை என்றும், இல்லாத ஒன்றை இருப்பதாக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி வருவதாக மன்சூர் பொய்களை கட்டவிழ்த்துவிட்டார். நாம் தமிழர் தம்பிகள் மன்சூர் அலிகான் பொய்களை பரப்பினார்கள்
இதன் பின் மன்சூர் மீது வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கில் அவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, கொரோனா தடுப்பூசி தொடர்பான எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டாலும், அவருக்கு 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.