பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா முன்னெடுத்துள்ள பொருளாதார மற்றும் வியூக ரீதியான நடவடிக்கைகள், ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு மேலும் கடும் அடியாக அமைந்துள்ளன. ஆபரேஷன் சிந்தூர் என்பது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையையும், அதனுடன் செயல்படுத்தப்பட்ட பொருளாதார மற்றும் வியூக நடவடிக்கைகளையும் குறிக்கிறது.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், நேரடி மற்றும் மறைமுக வர்த்தகத்திற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், இந்த வியூகங்கள் தொடர்கின்றன.
1960, செப்டம்பர் மாதம் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம், சிந்து நதி அமைப்பு மற்றும் அதன் துணை நதிகளின் நீர் விநியோகம் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. இது பாகிஸ்தானின் நீர் தேவைகளுக்கும், விவசாய உற்பத்திக்கும் மிகவும் முக்கியமானது. இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இந்தியாவின் ஒரு முக்கிய வியூகமாகும்.
கோதுமை, பருத்தி
இந்திய அரசின் தகவல்படி, பாகிஸ்தானின் 16 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்களில் 80% மற்றும் அதன் மொத்த நீர் பயன்பாட்டில் 93% சிந்து நதி அமைப்பையே சார்ந்துள்ளது. இது 237 மில்லியன் மக்களுக்கு வாழ்வாதாரமாகவும், கோதுமை, அரிசி மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கால் பங்காகவும் உள்ளது. மங்களா மற்றும் தர்பேலா அணைகளில் வெறும் 10% நேரடி சேமிப்பு திறன் மட்டுமே உள்ள நிலையில், நீர் வரத்தில் ஏற்படும் எந்தத் தடையும் பேரழிவுகரமான விவசாய இழப்புகள், உணவுப் பற்றாக்குறை, முக்கிய நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் ஆலைகள் முடங்கும் மின்வெட்டுக்கு வழிவகுக்கும். இந்த அதிர்ச்சிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பரவலான நிதி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியைத் தூண்டும்.
பாகிஸ்தான் இறக்குமதிக்கு தடை
மேலும், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் (DGFT) மே 2 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, பாகிஸ்தானில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அல்லது மூன்றாம் நாடுகள் வழியாகவோ எந்தப் பொருளையும் இறக்குமதி செய்வதை அல்லது கொண்டு செல்வதை தடை செய்கிறது. இரு நாடுகளுக்குமிடையே நேரடி வர்த்தகம் குறைவாக இருந்தாலும், மூன்றாம் நாடுகள் வழியாக நடைபெறும் வர்த்தகம் கணிசமானது.
500 மில்லியன் டாலர்
உலர் பழங்கள் மற்றும் ரசாயனங்கள் உட்பட சுமார் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் பிற நாடுகளின் வழியாக இந்தியாவுக்கு வருகின்றன. மறைமுக ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த விரிவான தடையால், பாகிஸ்தானின் ஏற்றுமதிகள் இந்தியாவுக்குள் நுழைவதை சுங்க அதிகாரிகள் தடுக்க முடியும் என்பது மற்றொரு வியூக நடவடிக்கையாகும் என்று ஆங்கில செய்தி நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
அந்நிய செலவாணி குறைவு
CEIC தரவுகளின்படி, டிசம்பர் 2024 இறுதிக்குள் பாகிஸ்தான் வெளிநாட்டு கடன் வழங்குநர்களுக்கு 131 பில்லியன் டாலருக்கும் அதிகமாக கடன்பட்டுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க, கடந்த இரண்டு நிதியாண்டுகளில் (FY2023 மற்றும் FY2024) சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தலா 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக கடன் பெற்றுள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு மூன்று மாத இறக்குமதி செலவுகளை மட்டுமே ஈடு செய்ய போதுமானது.இந்தியா எடுத்துள்ள இந்த பொருளாதார மற்றும் வியூக ரீதியான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் கடன் சுமை மற்றும் பொருளாதார பாதிப்பை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா அளித்த கடுமையான பதிலடியின் ஒரு பகுதியாகும்.
ஆதாரம் இருக்கே
ராணுவ ரீதியாக நாம் எடுத்த நடவடிக்கைகளை இப்போது சாட்டிலைட் படங்களே அம்பலப்படுத்திவிட்டது. அதேநேரம் நமது ஏர்பேஸ் பாதுகாப்பாக உள்ளதை நாம் புகைப்படங்கள் வாயிலாக நிரூபித்துவிட்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அமெரிக்கா மற்றும் சீனாவிடம் பிச்சை எடுக்க முடிவெடுத்துள்ளது பாகிஸ்தான்