Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

எந்த சவாலையும் சந்தித்து வெற்றி கொள்ளும் ஆற்றலும், துணிச்சலும் நமது வீரர்களுக்கு உள்ளது நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் அதிரடி.

Oredesam by Oredesam
September 20, 2020
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் எந்த சவாலையும் சந்தித்து வெற்றி கொள்ளும் ஆற்றலும்,  துணிச்சலும் நமது படை வீரர்களுக்கு உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

லடாக்கில் சீன எல்லைப் பகுதியில் நிலவும் சூழல் குறித்து, மாநிலங்களவையில் அறிக்கை அளித்த அவர், லடாக்கில் சவாலை சந்தித்து வருவது உண்மைதான் என்றும், அதேசமயம், நமது நாட்டை ஒருபோதும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற உறுதியை இந்த அவையின் மூலம் நாட்டின் 130 கோடி  மக்களுக்கு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி, கல்வான் பகுதியில், நமது தாய்நாட்டின் பாதுகாப்புக்காக கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் 19 வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ததைச் சுட்டிக்காட்டிய அவர், நமது பிரதமர் ,லடாக் சென்று, நமது துணிச்சல்மிக்க வீரர்களைச் சந்தித்த பின்னர் அவர்களது ,மன உறுதி அதிகரித்துள்ளது என்றார். அவர்களைச் சந்தித்த பின்னர், அவர்களது துணிச்சலையும், மன உறுதியையும் தாமும் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவும், சீனாவும் தங்களது எல்லைப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணவில்லை என்று கூறிய அவர், இரு நாடுகளும் இதற்காக நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த  சுமார் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக  ஆக்கிரமித்துள்ளது என்று தெரிவித்த அவர்,  மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை “சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963-ன்” படி பாகிஸ்தான் சீனாவுக்குசட்ட விரோதமாக கொடுத்துள்ளது என்றும் கூறினார்.  அருணாச்சலப்  பிரதேசத்தில் உள்ள இந்தியா-சீனா கிழக்கு எல்லைப் பகுதியில் சுமார் 90,000 ச.கி.மீ பகுதியும் தன்னுடையது என சீனா சொந்தம் கொண்டாடுவதாக அவர் கூறினார். 

எல்லைப் பிரச்சினை மிகவும் சிக்கலானது என்பதால், அதனை பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதற்கு பொறுமை மிகவும் அவசியம் என இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன என்ற போதிலும், இருதரப்புக்கும் பொதுவான உண்மையான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) இல்லாததால், எல்லையில் அமைதியைப் பராமரிக்க பல்வேறு உடன்படிக்கைகளை இருநாடுகளும் வகுத்து, நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

1993 மற்றும் 1996 உடன்படிக்கைகளின்படி, எல்ஏசி நெடுகிலும், இருதரப்பு பகுதியில் குறைந்தபட்ச அளவுக்கு தங்கள் படைகளை நிறுத்திக்கொள்ளலாம் என்றும்,  எல்ஏசி-யை இருதரப்பும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்புகொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

ஆனால், இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில்,  கல்வான் பள்ளத்தாக்கில்  நமது படைகள் வழக்கமான ரோந்து மேற்கொள்ள சீனப்படையினர் இடையூறு செய்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்றும்,  மே மாத மத்தியில், மேற்கு பகுதியில் கொங்கா லா, கோக்ரா, பான்காங் ஏரியின் வடகரை ஆகிய  இடங்களில், சீனத்தரப்பு நமது எல்லைக்குள் ஊடுவ பல முறை முயற்சிகள் மேற்கொண்டன என்றும் கூறிய திரு. ராஜ்நாத் சிங்,  இந்த முயற்சிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து நமது ஆயுதப்படையினர் உரிய முறையில் பதிலடி கொடுத்ததாகக் கூறினார். 

எல்லையில் தற்போதைய நிலையை மாற்ற சீனா ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளும் முயற்சிகள் ஏற்கத்தக்கதல்ல என்று அந்நாட்டுக்கு ராஜியரீதியாகவும், ராணுவ வழியிலும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது என்ற தகவலையும் அவர் அவைக்குத் தெரிவித்தார். 

 தற்போதைய நிலைக்கு தீர்வு காண சீனத்தரப்புடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதாகவும்,  இரு தரப்பும் எல்ஏசியை மதித்து நடக்க வேண்டும், தற்போதைய நிலையை மாற்ற எந்தத் தரப்பும் தன்னிச்சையாக முயலக்கூடாது,  அனைத்து உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வுகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற மூன்று கொள்கைகள் வலியுறுத்தப்பட்டன என்றும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, ஆகஸ்ட் 29, 30 இரவில் சீன ராணுவம் பான்காங் ஏரியின் தென்கரைப் பகுதியில் மீண்டும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும்,  ஆனால், நமது படையினர் சரியான முறையில் செயல்பட்டு அந்த முயற்சிகளை முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சீனாவின் இந்த நடவடிக்கைள் 1993, 1996 உடன்படிக்கைகளை மீறுவதாக அமைந்திருந்தன என்று அவர் கூறினார்.

எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான வழியில் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மேற்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கூறிய திரு. சிங், கடந்த 4-ம்தேதி சீனப் பாதுகாப்பு அமைச்சரை மாஸ்கோவில், சந்தித்து விரிவான விவாதம் நடத்தியதாகவும், அதில், இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவித்ததாகவும் கூறினார். வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கரும், மாஸ்கோவில் சீன வெளியுறவு அமைச்சரை கடந்த 10-ம்தேதி சந்தித்து பேசியுள்ள விவரங்களை அவர் கூறினார்.

நமது  வீரர்களின் தீரத்தின் மீது இந்த அவை  முழு நம்பிக்கை  வைத்துள்ளது என்பதை காட்ட, இந்த அவை ஒன்றிணைந்து நமது படையினரைக் கவுரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திரு. ராஜ்நாத் சிங், இந்த ஒற்றுமை உணர்வு செய்தி நாடு முழுவதும் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதிலும் அதிர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரலே ஏவுகணையை 2-வது முறையாக டிஆர்டிஓ  வெற்றிகரமாக பரிசோதித்து.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரலே ஏவுகணையை 2-வது முறையாக டிஆர்டிஓ வெற்றிகரமாக பரிசோதித்து.

December 23, 2021
பஞ்சாபிலும் காங்கிரஸ் கதை முடிகிறது பாஜகவில் இணையும் முதல்வர்.

பஞ்சாபிலும் காங்கிரஸ் கதை முடிகிறது பாஜகவில் இணையும் முதல்வர்.

September 4, 2021
கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் உரையாற்றுகிறார்.

December 20, 2020
பிரதமர் உழவர் உதவி நிதி திட்டம், உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

விவசாயிகள் 7-வது தவணையின் பணம் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால் புகார் செயலாம்!`

December 30, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x