வணியாம்பாடியை சேர்ந்த மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளரும் நகர்மன்ற முன்னாள் கவவுன்சிலருமான வாசிம் அக்ரம் நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட கூலிப்படையால் தலையை வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்ப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள் மனதினை பதறவைதத்து. வாகனங்கள், மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அதுவும் மாலை 6 மணி அளவில் இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்த சம்பவம் வாணியம்பாடி மக்களை பீதியடைய செய்துள்ளது.
மனித நேய மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் வசீம் அக்ரம். வயது 43. இவருக்குத் திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை தனது குழந்தைகளுடன் நேற்று வாணியம்பாடியில் தொழுகை முடிந்து வெளிய வந்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வசீம் அக்ரமை காரில் வந்த ஆறு பேர்கொண்ட கும்பல் திடீரென சுற்றி வளைத்தது. பட்டா கத்திகளை சுழற்றிக்கொண்டு காரிலிருந்து இறங்கிய கும்பல், வசீம் அக்ரமைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்தது.
வாணியம்பாடி நகரகாவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து வசீம் அக்ரமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வசீம் அக்ரமின் உறவினர்கள் ஏராளமானோரும் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பதற்றம் தொற்றிக்கொண்டது.
இதனை தொடர்ந்து வசீம் அக்ரமின் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல் துறை தரப்பில் கூறியதாவது : ஜீவா நகரில் வசித்துவரும் டீல் இம்தியாஸ் என்பவர் கஞ்சா விற்பனை, ரவுடிகள் சாம்ராஜ்யம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னையில் பழைய இரும்புப் பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்வதாகத்தான் டீல் இம்தியாஸைப் பற்றிய அறிமுகம் முதலில் இருந்தது.
கடந்த ஜூலை 26-ம் தேதி காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், எஸ்.பி சிபிசக்கரவர்த்தி தலைமையில் 20 பேர் கொண்ட காவல்துறை படை ஜீவா நகரிலுள்ள டீல் இம்தியாஸின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் எட்டு கிலோ கஞ்சா, 10 பட்டா கத்திகள், 10 செல்போன்கள் சிக்கின. இது தொடர்பாக, டீல் இம்தியாஸின் கூட்டாளிகள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.இதற்கு காரணம் வாசிம் அக்ரம் என டீல் இம்தியாஸின் நினைத்தது வம்மம் வைத்தது.
இதனை தொடர்ந்து இம்தியாஸின் ஆட்கள் வசீம் அக்ரமுக்குத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்கள். வசீம் அக்ரமின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து டீல் இம்தியாஸின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் பாதுகாப்புக் கோரி வசீம் அக்ரம் காவல்துறையினரை அணுகியிருக்கிறார். இந்த நிலையில் தான் வாசிம் அகரம் கொலைசெய்யப்ட்டுள்ளார் என்கிறது காவல்துறை வட்டாரம். டீல் இம்தியாஸ்தான் முதல் நபர். அவர்தான் ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி விட்டிருக்கிறார்.