முதல்வர் ஸ்டாலின் அவர்களே உங்கள் தகப்பனார் கருணாநிதி அவர்களின் நினைவு இடத்தை எப்படி எல்லாம் அலங்கரித்து பராமரித்து வருகிறீர்கள் என்பதை நாடறியும்.
ஆனால்அதை போலத்தான் ஒவ்வொரு தமிழனும் தன் காலமான முன்னோர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என விரும்புவான்.? நேற்று முன்தினம் மகாளய அமாவாசை.தன் முன்னோர்களை நினைத்து ஒவ்வொருவரும் தன் வசதிக்கு ஏற்ப திதி கொடுத்து வணங்க விரும்புவார்கள்.?
அவர்கள் தாங்கள் காலம் காலமாக திதி கொடுக்கும் இடங்களில் திதி கொடுக்க வந்தால், திதி கொடுக்க தடை என கூறி போலீஸ் கும்பலை கொண்டு விரட்டி அடிக்கிறீர்கள்.இது நியாயமா.?
டாஸ்மாக், பள்ளிகல்லூரி, சினிமாதியேட்டர்,மால்கள் என எல்லாவற்றையும் திறந்து விட்டீர்கள். இங்கு எல்லாம் பரவாத கொரோனா ஹிந்து ஆலயங்கள்,சடங்கு சம்பிரதாயம் செய்யும் இடங்களில் மட்டும் தேடி போய் பரவி விடுமா.?
இது என்ன நியாயம் என புரிய வில்லை.திமுக வில் 90% ஹிந்துக்கள் தான் என தேர்தலுக்கு முன் கூறினீர்கள்.
இப்போது அந்த 90% மக்களை புறக்கணித்து மீதி இருக்கும் 10% மக்கள் மனம் குளிர ஆட்சி செய்கிறீர்கள்.
இந்துக்களின் உரிமையை பறிக்காதீர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















