Saturday, September 23, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு !

Oredesam by Oredesam
September 22, 2020
in இந்தியா, செய்திகள்
0
அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு !
FacebookTwitterWhatsappTelegram

அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில், வருகிற 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. முதலில் சி.பி.சி.ஐ.டி. விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண்சிங், உமா பாரதி, பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ், முன்னாள் எம்.பி. வினய் கட்டியார் உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு மே 31-ம் தேதி அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவர்களில் 17 பேர் இறந்து விட்டனர்.

READ ALSO

” இந்தியா எனும் யானையிடம் ” கனடா எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து

சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

அதனால், அத்வானி உள்பட மீதி 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. லக்னோவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தனி நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. நீதிபதி ஓய்வுபெற்ற போதிலும், விசாரணையை முடிப்பதற்காக உச்சநீதிமன்றம்  அவருக்கு பதவி நீட்டிப்பு அளித்தது. ஆகஸ்டு 18-ம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. பின்னர், செப்டம்பர் 30-ம் தேதிவரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது.

அதனால், அதற்கு முன்பு, அத்வானி உள்ளிட்டோரின் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடந்தது. பெரும்பாலானோர் காணொலி காட்சி மூலமே ஆஜராகினர். தாங்கள் நிரபராதி என்றும், அரசியல் காரணங்களுக்காக வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். கடந்த மாதம் 30-ம் தேதி, விசாரணை முடிவடைந்தது. பிறகு, கடந்த 2-ம் தேதி, அனைத்து தரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர். அன்றே தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வருகிற 30-ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி எஸ்.கே.யாதவ் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு, இதே செப்டம்பர் 30-ம் தேதிதான், அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

ShareTweetSendShare

Related Posts

” இந்தியா எனும் யானையிடம் ”  கனடா  எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து
உலகம்

” இந்தியா எனும் யானையிடம் ” கனடா எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து

September 23, 2023
சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !
செய்திகள்

சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

September 22, 2023
மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.
இந்தியா

மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.

September 22, 2023
சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..
செய்திகள்

சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..

September 19, 2023
“இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !
இந்தியா

“இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !

September 19, 2023
காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்
அரசியல்

காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்

September 19, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

முன்னாள் கவுன்சிலர் வசீம் அக்ரம் தலையை வெட்டி கொடூர கொலை செய்த கஞ்சா டீலர் இம்தியாஸ்தான்! திடுக்கிடும் தகவல்கள்!

முன்னாள் கவுன்சிலர் வசீம் அக்ரம் தலையை வெட்டி கொடூர கொலை செய்த கஞ்சா டீலர் இம்தியாஸ்தான்! திடுக்கிடும் தகவல்கள்!

September 12, 2021

நாம் தினமும் காலையில் சூரிய மந்திரத்தை சொல்ல அன்றைய நாள் முழுவதும் நம் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியைப் பெறும்.

April 24, 2020

திமுக.,விற்கு வெறும் 34 தொகுதிகள் தான் கிடைக்கும்: முதல்வர் பழனிசாமி.

January 25, 2021
ராஜஸ்தான் கேரளாவில் நடக்கும் குற்றங்களை மறைக்கவும் 2 ஜி வழக்கை  திசை திருப்பவும் நடக்கும் நாடகம் !

ராஜஸ்தான் கேரளாவில் நடக்கும் குற்றங்களை மறைக்கவும் 2 ஜி வழக்கை திசை திருப்பவும் நடக்கும் நாடகம் !

October 7, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ” இந்தியா எனும் யானையிடம் ” கனடா எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து
  • சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !
  • மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.
  • சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x