ஸ்டாலின் தவிர வேறுயாராலும் கோமாளித்தனமாக பேச முடியுமா என்று தெரியவில்லை.

முதல்வர் எடப்பாடியின் சவாலை ஏற்று விவாதிக்க நான் தயார் என்று சொல்லிவிட்டு பிறகு ,”ஊழல் புகார்களை விசாரிக்க ஆளுநர் அனுமதி தர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு விவாதிக்க வாருங்கள்” என்றும் சொல்லியிருக்கிறார்.
இப்படியெல்லாம் கோமாளித்தனமாக யாராலாவது பேச முடியுமா என்று தெரியவில்லை.


எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் ஆளுங்கட்சியின் ஊழல் குறித்த முழு ஆதாரங்கள் இருப்பதாக சொல்கிறார். அப்படி தன்னிடம் இருக்கும் ஆதாரத்தைதான் ஆளுநரிடம் கொண்டு போய் ஒப்படைத்தார்..

அப்படி தன்னிடம் தெளிவான ஆதாரங்கள் இருக்கிற போது தைரியமாக முதல்வருடன் விவாதத்திற்கு வருவதன் மூலம் மக்கள் மன்றத்திலேயே அதை கொண்டு வரலாமே,, இதில் என்ன தடை?
இந்த ஆட்சி எப்படி தன் மேல் இருக்கும் ஊழல் புகார் உண்மை என்று ஏற்று அதை விசாரிக்க அனுமதி கொடுக்கும்?

எதாவது பொருள் உள்ளதா இவர் பேசுவதில்..நியாயப்படி எதிர்க்கட்சி தலைவரை பார்த்து விவாதத்திற்கு பயந்து முதல்வர் ஓட வேண்டும். ஆனால் தலைகீழாக முதல்வரை பார்த்து எதிர்க்கட்சி தலைவர் ஓடுகிற விசித்திரம் இங்கேதான் நடக்கும்.


ஆனால் திமுக தலைவர் கருணாநிதியே ஜெயலலிதாவிடம் விவாதிக்க பயந்தவர்தான். பிக்பாஸ் ஆரி போல பல வகையில் திரு.கருணாநிதியை செல்வி.ஜெயலலிதாவும் தூண்டிவிட்டு பேசியெல்லாம் பார்த்தார் ஆனாலும் நடக்கவில்லை..

என்னை பார்த்து கோழை போல ஓடி ஒழிகிறார் கருணாநிதி என்றார். சட்டமன்றத்துக்குள் நான் நுழைந்தாலே கோப்புகளை முகம் வரைக்கும் அடுக்கிக் கொண்டு அதற்குள் பதுங்கிக் கொள்கிறார் என்றெல்லாம் சொன்னார் அசரவேயில்லை “தானைத்தலைவர்”?
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போதும் கச்சத்தீவு, காவிரி பற்றி சட்டமன்றத்தில் நேருக்கு நேர் விவாதிக்க கருணாநிதியை அழைத்தார் அப்போதும் அவர் போகவில்லை.

அவருக்கே இந்த நிலை என்றால் ஸ்டாலின் எடுக்கும் நிலைபாடுகளை புரிந்துகொள்ள முடிகிறது…?

Exit mobile version