ஆனால் அவர் பொது மேடையில் பிராமண ஜாதிகளை பாராட்ட மாட்டார்கள். அவர் கட்சி சார்ந்தவர்களையும் பாராட்ட விட மாட்டார்கள். திட்டுவார்கள், அல்லது திட்ட அனுமதிப்பார்கள்.
இதுதான் ஆர்க்யூமெண்ட்.
வலைத்தளம் என்பது பொது மேடை போல ஒரு இடம், இது ப்ரைவேட் வாழ்க்கை அல்ல.
வலைத்தளத்தில் உச்சகட்டமாக இந்துக்களை வையும், பிராமண ஜாதிகளை அவதூறு செய்யும் ஒருவரை இஷ்யூ பேஸ்ட் சப்போர்ட் என சொல்வது ஸ்டாலின் குடும்பம் மேடையில் இஷ்யூ பேஸ்டாக பிராமணர்களை பாராட்ட விடுவார்களா என்ற கேள்விக்கே செல்லும். ஒரு நாளும் செய்ய மாட்டார்கள்.
நீங்கள் பாராட்டினால் கேட்டுக் கொள்வார்கள். ப்ரைவேட்டாக பாராட்டுவார்கள், மேடைகளில், வலைத்தளங்களில் இடம் தரமாட்டார்கள்.
மதமாற்ற குழு பேக் ஹேண்டாக பிராமணர்களை பாராட்டும், அது பல நேரம் நம் நண்பர்களுக்கு புரியாது. இந்துக்களிலேயே நீங்கதான் புத்திசாலி ரகத்தில் புகழ்ந்து அடிப்பார்கள்.
நம் நண்பர்கள் சிலிர்த்து விடுவார்கள். இது காம்ளிமெண்டே இல்லை, வம்பு என நான்கு மாடுகளும், சிங்கமும் கதையை படித்தவர்களுக்கு தெரியும்.
திராவிட நண்பர்கள் பகுத்தறிவாளர்கள் அல்லர், மத மாற்ற நண்பர்கள் பகுத்தறிவாளர்கள் அல்லர். அவர்கள் திடமாக தங்கள் தலைமை என சொல்வதை கடைப்பிடிப்பவர்கள். இஷ்யூ பேஸ்டாக எல்லாம் ஆதரவு என நிற்க மாட்டார்கள்.
தனிப்பட்ட வாழ்வில், போன் காலில், தொழிலில் எல்லாருடனும் எது தேவையோ அப்படி பழகி , நட்புடன் இருப்பதில் தவறில்லை
வலைத்தளங்களில், மேடைகளில் அசிங்கமாக பேசுபவர்களிடம் இஷ்யூ பேஸ்ட் சப்போர்ட் என்றால் , உங்களை திட்டுவதும் ஒரு மைனர் இஷ்யு என்றே பார்க்கப்படும்.
இதெல்லாம் ஓப்பனாக பொலிட்டிக்கல் ஓப்பினியன் பேசுபவர்களுக்கு பொருந்தும், வலைத்தளங்களில் ஓப்பன் பொலிட்டிக்கல் ஒப்பீனியன் இல்லையென்றால் பொருந்தாது. ரோஜாப்பூ, குட்மார்னிங் போடுபவர்களுக்கு பொருந்தாது.
சமயப்பணியில் வாழ்வினை அர்ப்பணித்தவர்களுக்கு இது பொருந்தாது .
சமயப்பணியில் சடங்கு செய்பவர்கள் அடுத்தவர் மீது கசப்பின்றி இருப்பது ஆலயத்துக்கு செல்லும், சடங்கு செய்யும் ஓவ்வொரு இந்துவுக்கும் வரம்.
நம்ம குடும்பம் நல்லாயிருக்கனும், வீடு நல்லாயிருக்கனும், குலம் நல்லாயிருக்கனும் என நிற்கின்றோம்.
அதற்கு துணையாக மந்திரம் சொல்லி சடங்கு செய்விப்போர் நல்ல மனதுடன் கசப்பின்றி இருப்பது சடங்கு செய்பவருக்கும்,சாமி கும்பிடுபவருக்கும் வரம்.