விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி, சிறிது காலமாக அமைதியாக உள்ளார். எந்தவித அரசியல் ஈடுபாடில்லாமல் இருக்கிறார் இதற்கு காரணம் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருக்கிறார் என்ற செய்திகள் பரவியது. மேலும் விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைகிறார் என்ற நேற்றிலிருந்து தீயாக பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தது விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி. இத்தொகுதியில் மூன்று முறையாகசட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் கட்சியின் தலைமையின் மீது விஜயதாரணிக்கு கோபம் கடந்த 2021 ஆம் ஆண்டிலே ஆரம்பித்து விட்டது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டும் கூட முதல் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் அறிவிக்கப்படவில்லை. அதன் காரணமாக கட்சியின் தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருந்தார். அப்போதே பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் பரவியதை தொடர்ந்துதான் மீண்டும் அவரே காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அத்துடன் இந்தப் பிரச்சினை ஓய்ந்தது.
அதன் பின் கட்சிப் பணிகளில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டுகன்னியாகுமாரி எம்.பி.சீட்டுக்கு குறிவைத்து வேலைகளை செய்ய தொடங்கினார். இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் உறுப்பினராக இருந்த வசந்த குமார் மரணம் அடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் எம்.சீட் கேட்டார்.ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கட்சியில் வேலை பார்த்தவருக்கு சீட் இல்லை வாரிசுக்கு சீட்டா என மீண்டும் கட்சி தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருந்து வருகிறார் தற்போது வரை. இதன் காரணமாகவே எப்போதும் பரபரப்பாக இயங்கும் அவர் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார். ஏன் தொலைக்காட்சி விவாதங்களில் கூட விஜயதாரணியை காணமுடியவில்லை.
இந்த நிலையில் தான் கன்னியாகுமரி பாரளுமன்ற தொகுதியில் இந்தமுறை எம்.பி சீட் கண்டிப்பாக வேண்டும் என காங்கிரஸ் தேசியதலைமையிடம் அழுத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார். இதனை தேசிய காங்கிரஸ் தலைமை நிராகரித்து விட்டதாக தெரிகிறது. ஆனால், தி.மு.க கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டாலும் தற்போது எம்.பி யாக இருக்கும் விஜய் வசந்திற்கு தான் வழங்க வேண்டும் என கூறிவிட்டார்களாம் அதற்கு காரணம் தேர்தலில் பணம் செலவு செய்வது தான்.அதன் காரணமாக விஜயதாரணிக்கு அந்த சீட்டு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சித் தலைமையோடு விஜய் வசந்த் நல்ல நட்போடும் கட்சிக்கு பணம் செலவழித்தும் வருகிறார். தேர்தல் சமயத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கவும் அவர் தயாராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனால் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் விஜய் வசந்தே போட்டியிட வாய்ப்பு வழங்கும். என உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தேர்தல்களில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸில் சீட்டு கேட்டு வரும் விஜயதாரணி இந்த முறை கண்டிப்பாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டே தீர வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்காக தான் பாஜகவில் இணைவது குறித்து அவரது ஆதரவாளர்களுடன் டெல்லியில் பேசி வருவதாக, தகவல்கள் வெளிவருகிறது. மேலும் பா.ஜ.க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது கன்னியாகுமாரி தொகுதியா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் கன்னியாகுமரி, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் விருப்பமான தொகுதியாகும். அவர் அங்கு பலமுறை போட்டியிட்டிருக்கிறார். ஒருமுறை வெற்றியும் பெற்று இருக்கிறார்.தற்போது வேலைகளையும் துவக்கி விட்டார்.
இந்நிலையில் அவரை விடுத்து வேறு யாருக்கும் சீட்டு வழங்குவது என்பது தற்போது பாஜகவில் இயலாத காரியமாக உள்ளது. இந்த நிலையில், அடுத்த முறை பிரதமர் மோடி வருகையின் போது விஜயதாரணி பாஜகவில் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றது. தற்போது விஜயதாரணி டெல்லியில் தான் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.