நவீன தீண்டாமையை கடைபிடிக்கும் தி.மு.க! பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அதிரடி!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.மேலும் , தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிப்பட தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இதனால் பொது இடங்களை தவிர்த்து விநாயகர் சிலை வைத்து வழிபாடுகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடுகள் நடைபெற்றன. மத்திய அரசின் பல திட்டங்களையும் ரபேல் விமானத்தையும் தாங்கியவாறு விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வழிபாடு முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், “தனியார் பள்ளிகளில் மட்டும் மூன்றாவது மொழிக்கான முக்கியத்துவத்தினை கொடுத்துவிட்டு அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்க எதிர்ப்பு தெரிவிப்பது நவீன தீண்டாமை” என்றும் இதனை திமுக கடைப்பிடிக்கின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் மூன்றாவது மொழி அவசியமில்லை என்று திமுக மட்டுமல்லாது, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் எதிர்ப்பது எதற்காக என்பதை நாம் கவனிக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல துறைகளின் ஆகப்பெரும் ”பணக்கார” பிரபலங்கள் ஒவ்வொருவரும்’ தங்களுடைய குழந்தைகள், பேரக்குழந்தைகள் எல்லாம் தமிழகத்தில் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் ?”’வேறுமாநிலத்தில் எனில்.அங்குள்ள எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் ?”வெளிநாடுகளில் படிக்கிறார்கள் எனில்.. ஏன் வெளிநாடுகளில் படிக்கிறார்கள் ?”போன்றவற்றை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்துவிட்டு .அதன்பிறகு எதிர்ப்பு தெரிவிப்பதே சரியானது .

ஏழைக்கு ஒரு வகை கல்வி, மத்திய வகுப்புக்கு ஒரு வகை கல்வி , பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி, மகா பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி.என்று வகை பிரித்து இங்கு கல்வி விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.என்பது தான் .யாராலும் மறுக்க இயலாத இங்குள்ள கள எதார்த்தம்.இதுபோல் பல்வேறு அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் புதிய கல்வி கொள்கை க்கு வரவேற்பு அளித்து வருகின்ற நிலையில் திமுக அதிமுக போன்ற கட்சிகள் இதை எதிர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பிவருகிறார்கள் . மேலும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பள்ளி கல்லூரிகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் மகள் நடத்தும் சன் சைன் ஸ்கூல் இந்தி கற்று தருவதில்லையா ? என்ற கேள்வியும் மேலோங்கி உள்ளது.

Exit mobile version