தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்குவதை ஒட்டி தீவிர ஆலோசனை மற்றும் வாக்கு சேகரிப்பு பணியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இன்று பல்லடத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியது:-“கோவையில் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கிவிட்டது” “வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்சி பாஜக என தெரியும்,மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வருவார் என தெரிந்து நடக்கும் தேர்தல்”
“ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற ரூ.10,000 கோடி வேண்டும்;ஆனைமலை நல்லாறு திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து எந்த வேட்பாளரால் பெற்று தர முடியும் என்பதை யோசித்து பாருங்கள்;
உங்கள் தொகுதி பிரச்னைகளை மத்திய அரசிடம் கொண்டு சென்று சரி செய்வதற்கு ஒரு நபர் தேவை;
இந்தியாவின் பரிமாண தன்மையை மாற்ற பாஜகவுக்கு 400 எம். பி.க்கள் வேண்டும்,எதிர்க்கட்சியினரை பேச விடாமல் தடுக்க வேண்டும் என்ற கர்வத்தில்ல அல்ல , இந்தியாவின் வளர்ச்சிக்காக”
“பிரதமர் நரேந்தி மோடி பாரபட்சம் பார்ப்பதில்லை;பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வெறும் 2.4 சதவீத வீடுகள் தான் கட்டிக் கொடுத்துள்ளோம்;தமிழ்நாட்டில் பாஜக எம்.பி.க்கள் இல்லாதது தான் இதற்கு காரணம்”
- திருப்பூர் பல்லடத்தில் பாஜக மாநில தலைவரும்,கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பேச்சு