ஒவ்வொரு இனமும் தன்னுடைய பண்பா டு அடையாளம் பெருமைப்படுத்தப்படும்பொழுது அதற்கு காரணமானர்வர்களைவணங்கி போற்றி நிற்கும் என்பதற்கு அடையாளமாக தேவேந்திர குலவேளா ளர்கள் மோடியின் புகழ் பாடியும் பிஜேபியின் கொடி தாங்கி நிற்பதையும் உதாரணமாக கூற முடியும்.
இப்பொழுதும் கோவையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் சிவனும் பார்வதியும் தேவேந்திர குலவேளாளர் தம்பதிகளாக மாறி வயலில் நாற்று நட்டு நெல் விளைச்சலை துவங்கி வைப்பார்கள்.
சிவன் பட்டீஸ்வரராகவும் பார்வதி பச்சை நாயகி யாகவும் தேவேந்திர குல பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நடுவார்கள்..
இது காலம் காலமாக நடைபெற்று வரும் சம்பிரதாயம்.
ரிக் வேதத்தின் முதல் கடவுள் இந்திரன் மழைகடவுளான அவனை வணங்கி மழை வேண்டி ஆதிதமிழர்களான இவர்கள் இந்திர விழா நடத்திய வரலாறு இன்றும் சங்க இலக்கியங்களில் இருக்கிறது.
விவசாயம் என்கிற வேளாண்மையை இவர்கள் செய்து வந்து வேதம் போற்றிய இந்திரனை இவர்கள் முதல் கடவுளாக வணங்கியதால் தேவேந்திர குல வேளா ளர்கள் என்கிற பெயர் பெற்றார்கள்.
இந்தஅடையாளத்தை மறைத்து அவர்களை ஆதிதிராவிடர்களாக மாற்றி அவர்களை மதமாற்றி வந்தார்கள் திராவிட திருடர் கள்.காலம் மாறி அம்மக்களிடையே கல்வியும்வளமையும் புகுந்த பொழுது அவர்களின்அடையாளம் தேடிய பல அமைப்புகள் நாங்கள் தான் தமிழகத்தின் மூத்த குடி மக்கள் உலகின் முதல் நூலான ரிக் வேதம் கூறும் இந்திரனின் வழி வந்தவர்கள் .
அதனால் எங்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றி எங்களை தேவே ந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள்.
மோடியும் சென்னை வந்து நான் நரேந்தி ரன் நீ தேவேந்திரன் என்று அம்மக்களை அழைத்து அவர்களின் தொன்மையான வரலாற்றை பேசி அவர்களின் கோரிக் கையை நிறைவேற்றுவோம் என்று கூறிபாராளுமன்றத்தை கூட்டி சட்டமாக்கி விட்டார்.
இதற்கு நன்றிக்கடனாக தேவேந்திர குலவேளாளர் இன மக்கள் மோடியையும் பிஜேபியையும் தலையில் வைத்துக் கொண்டாடி வருகிறார்கள் என்பதை நான்கண் கூடாக கண்டு வருகிறேன்.இதைநீங்களும் தென் மாவட்டங்களில் அதிமுககூட்டணிக்கு கிடைக்கும் வெற்றியின் மூ லமாக நீங்களும் அறிந்து கொள்வீர்கள்.
நான் ஒரு மத்திய அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு வேலை நிமித்த மாக செல்வதுண்டு.அங்கு வேலை செய்யும் ஊழியர்களில் பலர் எனக்கு நன்குபழக்கமானவர்கள்.இவர்களில் மேனேஜர்முதல் கடை நிலை ஊழியர்கள் வரை என்னிடம் நன்கு பழகுவார்கள்.மத்திய அரசு சார்ந்த நிறுவனம் என்றா லே பிஜேபி எதிர்ப்பு அதிகமாக இருக்கும்என்று நமக்கு தெரியும். இடது சாரி சிந்தனை அதிகமாக உள்ள ஊழியர்களை கொண்ட மத்திய அரசு நிறுவனத்தில் தேவேந்திர குல வேளாளர் இன மக்களு ம் அதிகளவில் இருக்கிறார்கள்.நான் பிஜேபி ஆதரவாளன் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் அ வர்களில் பலர் பிஜேபியெல்லாம் ஒரு கட்சியா? என்று என்னிடம் கிண்டல் செ ய்து வருவார்கள்.
ஏனென்றால் அவர்களில் பெரும்பாலோர் திமுக ஆதரவாளர்கள்தான்.கடந்த லோக்சபா தேர்தலில் அவர்கள் என்னை ஓட்டிய ஓட்டு இருக்கிறதே அதைஎன்னால் இன்று வரை மறக்க முடிய வில்லை.அதிமுக பிஜேபி கூட்டணி தோல்விஅடைந்ததற்கு அவர்கள் என்னை கிண்ட ல் செய்ததோடு தமிழகத்தில் தாமரை மலரும் என்று கனவில் கூட நினைத்து விடவேண்டாம் என்று கலாய்த்ததை இன்றும்நினைத்து கொண்டு இருக்கிறேன்.ஆனால் அதே தேவேந்திர குல வேளாள நண்பர்கள் இந்த சட்டமன்ற தேர்தலில் பி ஜேபி கூட்டணிக்கு ஆதரவாக வேலை செய்ததையும் வாக்களித்ததையும் நினைக் கும் பொழுது இதை காலத்தின்கட்டளை என்று எடுத்துக் கொள்ளவா இல்லை கட வுளின் ஆசி என்று எடுத்துகொள்ளவா? என்று எனக்கு தெரிய வில்லை.
நான் தேவேந்திர குல வேளாளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவர்களின் 7 உட்பிரிவுகளை ஒன்று படு த்தி தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை யை ஏற்றுஅது நிறைவேற்றப்படும் என்று மோடி அறிவித்தற்கு மிகப்பெரிய அளவி ல் வரவேற்பு அம்மக்களிடையே காணப்ப டுகிறது என்று கூறி இருந்தேன்.அது அம்மக்களிடையே கிராமம் முதல்நகரம் வரை படித்தவர் முதல் படிக்காதவர்வரை கூலி வேலை செய்பவர்கள் முதல்அரசு வேலையில் இருப்பவர்கள் வரைஅனைத்து மக்களையும் ஒன்றிணைத்துபிஜேபி ஆதரவு மன நிலையை எடுக்கவைத்து இருக்கிறது.அரசு வேலையில் உள்ள தேவேந்திர குலவேளாளர் இன மக்கள் நீண்ட காலமாக பல்வேறு அம்பேத்கார் இயக்கங்களுடன் தொட ர்பில் இருந்து மனுநீதிக்கு எதிரான கருத்தயலை முன்னெடுத்து பிஜேபி எதிர்ப்பு அரசியலை எடுத்து செல்பவர்கள்ஆனால் அவர்களே இப்பொழுது இந்தமுறை மோடிஜிக்காக பிஜேபி கூட்டணிக்கு வாக்களித்து இருக்கிறோம். நாங்க ள் மட்டுமல்ல எங்களுடைய மக்கள் வாழும் கிராமங்கள் நகரங்கள் என்று அனை த்து பகுதிகளிலும் சமூக வலை தளங்கள்வழியாக பிஜேபி கூட்டணிக்கு ஆதரவாகவாக்களிக்கும் படி பிரச்சாரம் செய்தோம்என்று கூறுகிறார்கள்.
இது தான் மோடி அரசு அறிவித்த தேவே ந்திர குல வேளாளர் பெயர் மாற்று அரசு ஆணைக்கு நாங்கள் செய்யும் நன்றிக்கடன் என்று அவர்கள் கூறிய பொழுது எனக்கு உண்மையிலேயே மெய் சிலிர்த்தது.
காலம் காலமாக இந்து மதத்தின் சாதிக்கட்டமைப்புகள் மூலமாக தங்களை இந்துவாகவே நினைத்துக்கொள்ள மறுத்த ஒ ரு சமூகம் இன்று இந்துத்வா அரசியலைவழி நடத்தி வரும் பிஜேபிக்கு ஆதரவாளர்களாக மாறுவது என்பது காலத்தின் கட்டாயமாகத்தானே இருக்க முடியும்.ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அரசியல் அமைவது காலத்தின் கட்டாயம்ஆகும் இப்பொழுது அதிமுக தன்னுடைய தேவர் ஆதரவு வாக்குகளை தினகரனிட ம் இழந்து நிற்கிறது.
திமுக தன்னுடைய தேவேந்திர குல ஆதரவு வாக்குகளை பிஜேபியிடம் இழக்க இருக்கிறதுஇதன் மூலமாக தென் தமிழகத்தில் பிஜேபியை காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் மாதிரி கொண்டு செல்ல முடி யும்.அதாவது தமிழகத்தை மீண்டும் தேசிய அரசியலை நோக்கி கொண்டு செ ல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.
பிஜேபி வளர்ந்த மாநிலங்களில் அது ஆரம்பத்தில் ஏதாவது ஒரு இனத்தை முன்வைத்து தான் வளர்ந்து இருக்கிறது. குஜராத்தில் படேல்கள் கர்நாடகாவில் லிங்காயத்துக்கள் ராஜஸ்தானில் ராஜ்புத்கள்சட்டிஷ்கரில் சாஹூக்கள் என்று பிஜேபிபல மாநிலங்களில் தன்னை நிலை நிறு த்திக்கொள்ள ஒரு இனத்தின் துணை யையே தேடி இருக்கிறது.அந்த வகையில் பிஜேபி கூட்டணிக்கு மட்டுமே எங்களின் வாக்கு என்கிற தே வேந்திர குல வேளாள இன மக்களின் உணர்வுகளை பார்க்கும் பொழுது தமிழ கம் புதியதொரு அரசியல் மாற்றத்திற்கு தயாராகி வருவதாகவே தெரிகிறது.
தமிழக மக்கள் தொகையில் சுமார் 8சதவீதம் அளவில் தேவேந்திர குல வே ளாளர் இன மக்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சுமார்30 மாவட்டங்களில் பரந்து வாழும் இவர்கள் தமிழகத்தில் 2 மாவட்டங்களைத் தவிர வேறு எங்கும் செல்வாக்கு இல்லாத பிஜேபிக்கு இனி ஆனிவேராக இருக்கப்போகிறார்கள் என்பது அதிசயமான உண்மையாகும்தமிழகத்தின்
தொன்மையான மக்களை ஆதி திராவிடர்களாக்கி அவர்களை பட்டியல் இனத்தில் நுழைத்து தாழ்த்தப்பட்டவர்களாக உருவாக்கி அவர்களை இந்துமதம் அடிமையாக்கி வைத்து இருந்ததுஎன்று அள்ளி விட்டு மதம் மாற்றம் செ ய்து வந்தது ஆங்கிலேயர்களின் காலை நக்கி வளர்ந்த திராவிட அரசியல் அந்த திராவிட அரசியலை அழித்து.
இந்துதேசிய அரசியலை தமிழகத்தில் எடுத்துசெல்ல மோடி எடுத்து விட்ட நான் நரேந்தி ரன் நீ தேவேந்திரன் என்கிற ஆயுதம் தேவேந்திர குல வேளாளர் இன மக்களி ன் மூலமாக தமிழகத்தில் பிஜேபியைவளர வைத்து ஒரு புதிய அரசியலை எழுத இருக்கிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















