சிந்து நதி நீர் நெருக்கடியை நாம் தீர்க்காவிட்டால் நாம் பட்டினி கிடந்தே சாகப் போகிறோம். சிந்து நதி நீர் படுகைதான் நம் உயிர்நாடி. 10-ல் ஒன்பது பேர் சிந்து நதியை நம்பியே உள்ளோம். எனவே இது ஒரு தண்ணீர் குண்டு போன்றது என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சையது அலி ஜாபர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பலரும், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஷெபாஸ் ஷெரீப்பிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்களாம். அதுமட்டுமில்லாமல் சிந்து நதியில் தண்ணீரை நிறுத்துவது போருக்கு சமமானது. எனவே அமெரிக்கா தலையீடு செய்து இந்தியாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர வேண்டும்” என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுறத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ கெஞ்சியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தானின் 80 சதவீதம் விவசாயம் சிந்து நதி நீரை நம்பியே உள்ளது. சிந்து நதி நீரை நிறுத்தினால் பாகிஸ்தான் பெரிய அளவிலான இழப்பை சந்திக்கும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை இந்த அதிரடி தொடரும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.
ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது
இதனால், அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில்தான், இந்தியாவுக்கு தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக 4 கடிதங்களை பாகிஸ்தான் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் மிகப்பெரிய தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டு இருப்பதாகவும், இதனால் நம்பிக்கை இழந்த நிலையில் அந்த நாடு தவிப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சொல்லப்போனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகும் அந்த நாடு சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால், இந்தியாவோ தனது நிலைப்பாட்டை பாகிஸ்தானிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதாவது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக செய்ய முடியாது என்றும் , ரத்தமும் தண்னீரும் ஒன்றாக ஓடாது என்றும் இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.
சிந்து நதி நீர் ஒப்பந்தமானது நம்பிக்கை மற்றும் நட்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனவும், பாகிஸ்தான் இதற்கு எதிராக செயல்பட்டு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்தது. இதனால்தான் பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வர சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது என இந்தியா முடிவு செய்து. இந்தியாவுக்கு பாகிஸ்தான் எழுதிய நான்கு கடிதங்களும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தே அமைந்து இருந்தது.
பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம் இந்த கடிதத்தை எழுதியிருக்கிறது. மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கு பாகிஸ்தானின் நீரவளத்துறை கடிதத்தை அனுப்பியதாம். இந்த கடிதத்தை ஜல்சக்தி அமைச்சகம் வெளியுறவு துறைக்கு அனுப்பி வைத்து இருக்கிறது.பட்டினி கிடந்தே சாக போகிறோம்ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் நிலை குலைந்த பாகிஸ்தான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயராக இருப்பதாக தொடர்ச்சியாக கூறி வருகிறது. பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பலரும், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஷெபாஸ் ஷெரீப்பிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்களாம். பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சையது அலி ஜாபர் கூறியதாவது: –
நீர் நெருக்கடியை நாம் தீர்க்காவிட்டால் பட்டினி கிடந்தே நாம் சாக போகிறோம். சிந்து நதி நீர் படுகைதான் நம் உயிர்நாடி. நமக்கு வரும் தண்ணீரில் நான்கில் மூன்று பங்கு வெளிநாட்டில் இருந்தே வருகிறது. 10-ல் ஒன்பது பேர் சிந்து நதியை நம்பியே உள்ளோம். எனவே இது ஒரு தண்ணீர் குண்டு போன்றது. நமக்கு முன்னாள் தொங்கி கொண்டு இருக்கிறது. இதனை உடனே செயலிழக்க செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்
இது ஒரு புறம் இருந்தாலும் தண்ணீருக்கான போர் என்பது ஒரு காலத்தில் வெறும் கருத்தியலாக தான் இருந்தது. இப்போது பாகிஸ்தானுக்கான சிந்து நதிநீரை நிறுத்தி இந்தியா அந்த போருக்கு அடிக்கல் நாட்டி உள்ளது. இது அணுஆயுத போருக்கான அச்சுறுத்தலாக கூட மாறும். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையீட்டு இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் வாங்கி தர வேண்டும்” என்று கெஞ்சியுள்ளார். இதன்மூலம் சிந்து நதி நீர் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா தலையீட்டு தீர்வு காண வேண்டும் என்று பிலாவல் பூட்டோ கூறியுள்ளார்..