அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) நடப்பாண்டு முதல் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்து வந்தன.
இந்த நிலையில் மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு முடிவெடுத்துள்ளது. உண்மையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் ஓபிசி ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்த்தை கொடுத்தது.
இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டுடன், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடும், நடப்பு 2021-22 கல்வி ஆண்டில் இருந்து அனைத்து இளநிலை/முதுநிலை மருத்துவ/பல் மருத்துவ படிப்புகளுக்கும் அகில இந்திய பிரிவில் நீட்டிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் போராடியும் அதை காங்கிரஸ் செய்யவில்லை.சமூக நீதி சமூக நீதி என்று எப்போதும் பேசி அரசியல் செய்யும் தி.மு.க பங்கேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஏன் சமூக நீதி நிலைநாட்ட முயற்சி எடுக்கவில்லை! முடிந்ததா இதை? பா.ஜ.க தான் உண்மையான சமூகநீதி இயக்கம் என்பதை பல வழிகளில் நிலைநாட்டியுள்ளார்கள்.அதில் இதுவும் ஒன்று.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் 27% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின் முதல் வெற்றி. ஆனாலும் 69% இட ஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் உறுதியான நிலைப்பாடு” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 10 வருடம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த என்ன செய்து கொண்டிருந்தார்கள் திமுகவினர் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது.
27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2020-ல் பதில் மனு தாக்கல் செய்த மத்திய பாஜக அரசு, “மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான தரவுகளை சேகரித்து அது தொடர்பாக முடிவெடுக்க ஓராண்டு கால அவகாசம் தேவை” என்று கூறியிருந்தது.
அதன்படி தற்போது அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவக் கல்வி இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது முழுக்க முழுக்க மோடி அரசின் சாதனை ஆகும். ஆனால் சொந்தம் கொண்டாட திமுகவினர் மற்றும் எதிர் கட்சிகள் கிளம்பிவிட்டார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















