முந்தைய அரசுகளுக்கும் மோடி அரசுக்கும் என்ன வித்தியாசம்?

முந்தைய அரசிலே ஒவ்வொன்னும் ஒன்னுபின்னாடி ஒன்னா நடக்கும்.

மோடி அரசிலே எல்லாம் ஒன்னா
தானா அது பாட்டுக்கு நடக்கும்.

உதாரணம்?

கடந்த மூன்று மாதங்களிலே கிட்டத்தட்ட
30 முறை பல ஏவுகணைகளை பரிசோதித்திருக்கிறது நமது ராணுவம்,

விமானப்படை, கடற்படை மற்றும் பாதுகாப்பு தளவாடங்களின் ஆராய்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) அதுவும் அக்டோபர் மாசம் மட்டும் வாரத்துக்கு ஒரு புதிய ஏவுகணையை ஏவி சோதித்திருக்கிறோம்.

இந்த விவசாயிகள் போராட்டம் அந்த போராட்டம் இந்த போராட்டம் எனும் வெற்றுக்கூச்சல்களிலே இதெல்லாம் கவனிக்கப்படுவதில்லை தான். பேசப்படுவதில்லை தான் அதுக்காக நடப்பதில்லை என ஆகிவிடாது.

லடாக் பகுதியிலெ புதிய கட்டமைப்புகள், நமது ராணுவத்தளபதி வளைகுடா நாடுகளுக்கு அரசமுறைப்பயணம்,

பிலிப்பைனஸ் நாட்டுக்கு ஏவுகணைகள் விற்றல், இஸ்ரேலிலே இருந்து புதிய தொழில்நுட்பம் வாங்குதல், அமெரிக்க டிரோன்களை குத்தகைக்கு எடுத்தல் என எல்லாம் அதுபாட்டுக்கு நடந்துட்டே இருக்கும்.

இது ராணுவத்திலே நடக்கும் வேலைகள் தான். மற்ற விஷயங்களிலேயும் தானா அதுபாட்டுக்கு வேலைகள் நடந்துட்டே இருக்கும்.

கோவிட் வேக்கசின் ஆகட்டும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகள் ஆகட்டும் அதெல்லாம் தானாக நடக்கனும் அமைச்சர்களும் அதிகாரிகளும் வேலை செய்யனும்.

இல்லாட்டி யாரு பதில் சொல்றது?

கீழே நடந்த சோதனைகளின் லிஸ்ட்

Hypersonic Technology Demonstration Vehicle 7 Sept
ABHYAS-High Speed Expendable Aerial Target 22 Sept
Laser Guided Anti Tank Guided Missile 22 Sept
Night trial of strategic missile Prithvi II 23 Sept
Supersonic cruise missile BrahMos 30 Sep
Laser Guided Anti Tank Guided Missile 1 Oct
Supersonic Shaurya strategic missile 3 Oct
Supersonic Missile Assisted Release of Torpedo 5 Oct
Prithvi-II 6 Oct
Rudram indigenous anti-radiation missile 9 Oct
BrahMos from indigenously-built stealth destroyer INS Chennai 18 Oct
Stand-Off Anti Tank Missile (SANT) 19 Oct
Brahmos air-launched cruise missile (ALCM) October 30
Quick Reaction Surface to Air Missile (QRSAM) System 13 Nov, 17 Nov
Brahmos Land attack version – 24 Nov
anti-ship version of BrahMos 1 Dec
Akash air defence missiles – 4 Dec

இதிலே முக்கியமாக பார்க்கப்பட
வேண்டியது பஞ்சாப் அருகே இருக்கும் விமானத்தளத்திலே இருந்து கிளம்பும் போர்விமானமோ அல்லது ஏவுகணைகளோ இந்திய பெருங்கடலிலே வரும் சீன போர்க்கப்பல்களை அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு வருவதற்கு முன்னரே தடுத்து நிறுத்தமுடியும். அதே போல் இங்கே கோவை சூலூர் விமானத்தளத்திலே இருந்து கிளம்பும் விமானம் பாக்கிஸ்தான் வரைக்கும் போய் குண்டுபோடமுடியும்.
இப்படி நடந்து கொண்டிருக்கும்போது சீன ராணுவம் ஒரு புதிய ஆயுதத்தை உபயோகப்படுத்தியாக சீன ராணுவமே பொய்ச்செய்தி வெளியிட்டதும் அதை நமது ராணுவம் மறுத்ததும் இங்கே பேசப்படவில்லை.
இதே போலவே புதிய பீரங்கிகள், டாங்குகள், துப்பாக்கிகள், கவச உடைகள், ஹெலிகாப்டர்கள் என அதுபாட்டுக்கு நடந்துட்டே இருக்குது.
மோடிக்கு அறிவுரை சொல்லுகிறேன், அரசு இதை உடனே ஒடுக்கியிடுக்கவேண்டும் அதை சாத்தியிருக்கவேண்டும் இதை உடைத்திருக்கவேண்டும் என சொல்ல கிளம்புபவர்கள் முதலிலே மோடி அரசு என்னென்னா செய்துகொண்டிருக்கிறது என பார்க்கவேண்டும்.
மற்ற அரசுகள் போல இங்கே தனிமனிதரின் ஆணைக்கான உத்தரவுகள் காத்திருப்பதில்லை. தலைமை என்பது திட்டம் தீட்டி அதை செயல்படுத்தும் பொறுப்பை விட்டுவிட்டு கண்கானிப்பதாக இருக்கவேண்டும். ஒவ்வொன்றிலும் போயி நோண்டிக்கொண்டிருக்கக்கூடாது.
இதனால் தான் ஒவ்வொன்றும் அது பாட்டுக்கு நடக்குது. இது தான் வித்தியாசம்.

கட்டுரை :- ராஜசங்கர் விஸ்வநாதன்.

Exit mobile version