மோடி அரசின் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் காஷ்மீரின் தனி அந்தஸ்து ரத்து, அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் பொது சிவில் சட்டம். இந்த 3 முக்கிய வாக்குறுதிகளில் 2 நிறைவேற்றியது மோடி அரசு இதில் பொது சிவில் சட்டம் தான் தற்போது எஞ்சியிருக்கும் வாக்குறுதி அந்த வாக்குறுதியும் நிறைவேற்ற முனைப்பு காட்டிவருகிறது மத்திய மோடி தலைமையிலான அரசு இதற்கு வலு சேர்க்கும் விதமாக டெல்லி உயர் நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளது
மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியாவில் சிவில் சட்டம் மட்டும் மதத்திற் கொன்றாக தனித்தனியாக இருப்பது குடிமக்களின் நன்மைக்கு எதிராக அமைந்துள்ளது. இந்த நிலையை மாற்றி இந்தியாவில் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் உருவாக்கிட வேண்டுமென்பதே நடுநிலையாளர்கள் மற்றும் பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடு ஆகும்.
நாட்டிற்கு பொது சிவில் சட்டம்மிகவும் அவசியமானது. அதை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. மேலும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறுகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது.கூறியுள்ளது.
இது குறித்து நீதிபதி பிரதீபா எம்.சிங் கூறுகையில் நவீன இந்திய சமூகம் படிப்படியாக ஒரேவிதமானதாக மாறி, மதம், சமூகம் மற்றும் சாதியின் பாரம்பரிய தடைகளை களைந்து வருகிறது,மேலும் இந்த மாறிவரும் முன்மாதிரிகளைப் பார்க்கும்போது, ஒரு பொதுவான சிவில் சட்டம் தேவையாக உள்ளது.நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் இருக்கவேண்டியது அவசியம் என்றுநான் கருதுகிறேன். இதை அமல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்றார்.
மத்திய அரசின் முயற்சியை டெல்லி உயர்நீதிமன்றமும் வலியுறுத்துவது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாட்டில், ஆளுக்கொரு சட்டம் இருக்க முடியாது. அதனால் தான், மத்திய அரசு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கிறது. அதைத் தான், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியும் சொல்லியிருக்கிறார்.அரசியல் சட்டமும், மதச் சட்டங்களும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், பொது சிவில் சட்டம் தேவையில்லை. ஆனால், வேறு வேறாக இருப்பதால் தான், பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. என்ற கருத்துக்கள் மேலோங்கி வந்துள்ளது.
இதையடுத்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் 5 ல், அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலை உள்ளது. இப்படி தகவல் பரவியதுமே, பொது சிவில் சட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்து மோதல்கள் துவங்கி இருக்கின்றன. 2019 ஆம் ஆண்டு மக்களைத் தேர்தலின் போது