பிரதமர் நரேந்திர மோடி கான்பூரில் பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு திட்டங்களில் பயனடைந்த 25 பயனாளிகள் பேசினார்.மத்திய அரசின் திட்டங்களில் பயனடைந்தவர்களில் ஷபானா பர்வீன் எனும் இஸ்லாமிய பெண்ணும் ஒருவர்.ஷபானா பர்வீன் கான்பூரில் உள்ள கித்வாய்நகர் பகுதியை சேர்ந்தவர்.
பிரதமரிடம் பேசிய ஷபானா பர்வீன் தனது கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முத்தலாக் மூலம் விவாகரத்து செய்துவிட்டதாக பிரதமரிடம் தெரிவித்துள்ளார். ஊரடங்கு நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நேரத்தில், பிரதமரின் ‘ஸ்வாநிதி’ திட்டம் பற்றி கேள்விப்பட்டேன். இந்த கடனுதவி திட்டத்தில் சேர்ந்து சொந்தமாக இட்லி மற்றும் தோசை விற்கும் ஒரு சிறிய உணவு கடையை ஆரம்பித்தேன்’ என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘ “உங்களால் தான் என் இரண்டு மகள்களையும் படிக்க வைக்க முடிகிறது. என் மகள்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் மிகவும் மோசமான நாட்களைப் பார்த்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் தலாக் கூறினார்.
நான் இரண்டு சிறிய மகள்களுடன் அவரது வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. என் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. என் மகள்களுக்கு வீடு இல்லை. அவர்கள் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று பிரதமர் மோடியிடம் ஃபர்சானா கூறினார்.
கடந்த வாரம், பிரதமர் மோடி பிரயாக்ராஜில் தனது பயணத்தின் போது சஹாரன்பூரில் ஷபானா பர்வீன் மற்றும் அவரது ஒன்பது மாத மகளை சந்தித்தார். அவர் பர்வீனிடம் வங்கி நிருபராக பணிபுரிவது பற்றி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் பர்வீனிடம் பேசுவது மற்றும் அவரது ஒன்பது மாத மகள் சித்ராவுடன் விளையாடுவது போன்ற படம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. பர்வீன் இதுவரை ரூ.55 லட்சம் பரிவர்த்தனை செய்து தனது மாவட்டத்தின் சிறந்த ‘வங்கி சகி’ ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது