கடந்த வாரம் இந்திய சீனா எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததனார். சீன தரப்பில் 55க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்துள்ளதாக சீனாவில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றது, இதனால் மீரானு போன சீனா பேச்சுவார்த்தை மூலம் இந்திய சீனா எல்லை பிரச்சனையை தீர்த்து கொள்ளலாம் என அடி பணித்து லாடக் எல்லையிலிருந்து 5 கிலோமீட்டர் பின் வாங்கியது. எதனால் சீனா பின்வாங்கியது என்றால் சீன வீரர்களை 300க்கும் மேற்பட்ட வீரர்களை 100 க்கும் குறைவான இந்திய வீரர்கள் தாக்கியதாலும் மேலும் சீன எல்லையில் உள்ள ராணுவ வீரக்ளுக்கு முழு சுதந்திரம் மத்திய அரசு கொடுத்துள்ளதால் பின் வாங்கியுள்ளது சீனா.
இந்த நிலையில் லடாக் எல்லைப் பிரச்சினையால் இந்தியா, சீனா இடையே போர்பதற்றம் நீடிக்கிறது. இதுதொடர்பாக சி-வோட்டர் நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி மீது எந்த அளவுக்கு நம்பிக்கை உள்ளது என்று சி-வோட்டர் தரப்பில் மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் 72.6 சதவீதம் பேர்பிரதமர் மோடி மீது முழு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தனர். சீனாவை எதிர்கொள்ளும் திறன் அவருக்கு உள்ளது என்றுஅவர்கள் உறுதிபட கூறினர். 16.2 சதவீதம் பேர் பிரதமர் மோடி மீது ஓரளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் 11.2 சதவீதம் பேர் பிரதமர் மீது நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தனர்.
கருத்துக் கணிப்பின்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 83.7 சதவீதம் பேர் மத்திய அரசுக்குஆதரவு அளித்தனர். 45 வயதுமுதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 76.5 சதவீதம் பேர் மத்தியஅரசு மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தனர். 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களில் 72.1 சதவீதம் பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்களில் 72.1 சதவீதம் பேரும் மத்திய அரசை ஆதரித்தனர்.
வருவாய் குறைந்த மக்களில் 75.4 சதவீதம் பேர் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். நடுத்தர வர்க்க மக்களில் 72.6 சதவீதம் பேரும் உயர் வகுப்பு மக்களில் 70 சதவீதம் பேரும் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்தனர்.
ஒட்டுமொத்த அளவில் 16.7 சதவீதம் பேர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளித்தனர். 9.6 சதவீதம் பேர் ஆளும் கட்சியையும் ஆதரிக்கவில்லை, எதிர்க்கட்சிகளையும் நம்பவில்லை என்று பதில் அளித்தனர்.
இந்தியாவின் முதல் எதிரி நாடு எது என்று சி-வோட்டர் தரப்பில் மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் 68.3 சதவீதம் பேர், சீனா என்று பதில் அளித்தனர். 31.7 சதவீதம் பேர், பாகிஸ்தானே முதல் எதிரி நாடு என்று தெரிவித்தனர்