70% மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் பாரத பிரதமர் மோடி! 13 உலக தலைவர்களில் மோடி தான் டாப்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு 70 சதவிகித மக்கள் ஆதரவு உள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள முக்கியமான 13 உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி தான் டாப்பில் உள்ளார்.

நாட்டு மக்களிடையே நடத்தும் இந்த சர்வே-இன் அடிப்படையில், அந்நாட்டின் பிரதமர் தலைவர்களுக்கு மக்களிடையே எத்தனை சதவிகிதம் பேரின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு உள்ளது என்பது குறித்த தகவல்களை தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிடும்.

அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சர்வே முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 70% மக்கள் ஆதரவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார்.

இந்திய பிரதமர் மோடி 70%

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 64%

இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி 63%

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் 52%

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 48%

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 48%

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 45%

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 39%

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் 38%

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 35%

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் 34%

ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 25%

பிரதமர் மோடிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தோரின் சதவிகிதமும் 25% ஆகக் குறைந்துள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை கையாண்ட விதம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் அலையைச் சிறப்பாகக் கையாண்டு, வைரஸ் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கப் பிரதமர் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அவரது அவரது செல்வாக்கு அப்போது மக்களிடையே அதிகரித்தது.

நாடு முழுவதும் உள்ள மக்களிடம் ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்ட சர்வே மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது

Exit mobile version