2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி அமைத்து பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் மாதம்தோறும் உரையாடுவதற்காக “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 03 ஆம் தேதி (விஜயதசமி) தனது முதல் உரையைப் பிரதமர் தொடங்கினார். இந்நிலையில், இன்று பிற்பகல் 11 மணியளவில் “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடினார்.
கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் மூன்றாவது முறையாக மான் கி பாத்தின் 67-வது பதிப்பில் தேச மக்களுடன் மோடி உரையாற்றியதாவது….
கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
கார்கில் போரில் வெற்றிக்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு சமூக வலைதளங்களிலும் மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 21 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில், இந்தியா ராணுவம் கார்கில் போரில் வெற்றி பெற்றனர். அப்போது பாகிஸ்தானுடன் நல்லுறவையே இந்தியா விரும்பியது. ஆனால், எந்தவித காரணமும் இல்லாமல் அனைத்து தரப்பினருடனும் பகையை வைத்திருக்கவே அந்நாடு விரும்பியது.
இந்தியாவின் நிலத்தை பிடிக்கவும், உள்நாட்டு குழப்பத்திலிருந்து திசைதிருப்பவும், மோசமான திட்டங்களுடன் பாகிஸ்தான் கார்கில் போரை துவக்கியது. நாட்டிற்கு எதிரான விஷயங்களை, சமூக வலைதளங்களில் பரப்பும் தவறை செய்யக்கூடாது. ஒட்டு மொத்த உலகமுமே, இந்திய வீரர்களின் திறமையையும், வீரத்தையும் பார்த்தது. நம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். நாடு ஒற்றுமையாக இருக்க அனைத்தையும் செய்வோம். கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம், மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் சிறப்பாக உள்ளது. இறப்பு விகிதமும் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளது. நாம் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியிருந்தாம், கொரோனா அச்சுறுத்தல் முடியவில்லை.
கொரோனாவுக்கு எதிரான போர் முடியாததால் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை!!
பல பகுதிகளுக்கும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியாததால், மக்கள் எப்போதும் மாஸ்க் அணிய வேண்டும். அசவுகரியமாக இருந்தாலும், கொரோனாவை தடுக்க மாஸ்க் அவசியம் என அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















