மத்திய பிரதேசம் மகாராஸ்டிரா ஜார்கண்ட் மாநிலங்களில் அரசியல் குழப்பங்கள் ஆரம்பித்து விட்டது.
மிக சுலபமாக ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு மகாராஸ்டிரா ஜார்கண்ட்டை விட மத்திய பிரதேசத்தில் தான் அதிகமாக இருந்தாலும் மகாராஸ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில்தான் பிஜேபி உடனடியாக ஆட்சிக்கு வர விரும்புகிறது.
அதிலும் இந்தியாவின் நம்பர்-1 மாநிலமான மகாராஸ்டிராவை விட குட்டி மாநிலமான ஜார்கண்ட்டில் ஆட்சியை கைப்பற்றவே பிஜேபி முனைப்புடன் இருக்கிறது.
இதற்கு காரணம் இப்பொழுது காங்கிரஸ் கஜானாவுக்கு செல்லும் பணம்பெருமளவில் ஜார்கண்ட்டில் இருந்து தான்செல்கிறது.
சுயேச்சை எம்எல்ஏவாக இருந்து காங்கிரஸ் துணையுடன் முதல்வராகி பல ஆயிரம் கோடிகளை சுருட்டிய மதுகோடா மண்ணான ஜார்கண்டில் இருந்து தான் காங்கிரஸ் இப்பொழுது அள்ளிக் கொண்டு இருக்கிறது.
இதற்கு செக் வைக்க விரும்பும் பிஜேபி முதலில் ஜார்கண்டில் தான் ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜார்கண்ட் மாநிலம் நிறைய கனிம வளம் நிறைந்த மாநிலம் மட்டுமல்லாது அரசியல் கட்சிகளுக்கு கரண்சியை அள்ளி கொடுக்கும் மாநிலங்களில் கர்நாடகா மகாராஸ்டிராவுக்கு இணையான மாநிலம்.
கடந்த 2014 -2019 வரை பிஜேபிக்கு கிடைத்த நிதிகளில் பெருமளவு அதாவது சுமார் 50 சதவீத அளவில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்தே கிடைத்துள்ளதாக கூறுகிறார்கள்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு படிஅளந்து வந்த கர்நாடகாவை பிஜேபி கைப்பற்றி விட்டதால் விரக்தியில் இருந்த சோனியாவுக்கு பிஜேபி செய்த சில தவறுகளின் மூலமாக ஜார்கண்ட் மற்றும் மகாராஸ்டிரா மாநில ஆட்சி அதிகாரங்கள் மடியில் வந்து விழுந்தவுடன் மீண்டும் மமதை தலைக்கேறி விட்டது.
மகாராஸ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரேவையே அடிமையாக்கி அழகு பார்க்கும் சோனியாவுக்கு ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேம ந்த் சோரன் எம்மாத்திரம்?
காங்கிரஸ் ஜார்கண்ட் முக்திமோர்ச்சா கூட்டணி அரசு உருவாகி இரண்டு மாதம் கூட நிறைவடையாத நி லையில் இதுவரை 6 தடவைக்கு மேல் முதல்வர் ஹேமந்த் சோரனை டெல்லிக்கு அழை த்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் சோனியா.
இது தான் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்களை கோபம் கொள்ள வைத்துள்ளது.
காங்கிரஸ் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வை அடிமையாக நினைக்கிறது என்று கோபத்தில் இருக்கிறார்கள் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள்
பிஜேபியோடு கூட்டணி வைத்து ஆட்சியில் இருந்து இருக்கிறோம். ஆனால் அவர்கள் காங்கிரஸ் மாதிரி இல்லாது எவ்வளவு டீசண்டாக கூட்டணியில் இருந்தார்கள் என்று பிஜேபி புகழ் பாட ஆரம்பித்து விட்டார்கள் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள்.
இது மட்டுமல்லாது அமைச்சர் பதவி கிடைக்காத 7-8 காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் பாபுலால் மராண்டி மூலமாக புதிய ஆட்சி அமைய உதவினால் அமைச்சர் ஆகிவிடலாம் என்கிற கனவுடன் பிஜேபிக்கு நூல் விட்டு வருகிறார்கள்.
இதற்காகவே காத்து இருந்த பிஜேபி பாபுலால் மராண்டியையே பிஜேபியில் இணைய வைத்து முதல்வர் ஆக்குகிறோம் வாருங்கள்
என்று காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்திமோர்ச்சா எம்எல்ஏக்களுக்கு வலைவீசி காத்து இருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை இருந்த 20 ஆண்டு கால ஆட்சியில் பிஜேபி ஆட்சியும் ஜனாதிபதி ஆட்சியும் தான் அதிகளவில் இருந்துள்ளது.சோரன்கள் அதிகபட்சமாக 1 வருடம் தான் முதல்வராக தாக்கு பிடித்து இருந்து இருக்கிறார்கள்.
பிஜேபி தான் அதிககாலம் ஜார்கண்ட்டில் ஆட்சியில் இருந்து இருக்கிறது. இது விரைவில் மீண்டும் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கலாம்..
கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.