ஜி-20 மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி டெல்லி ஜி-20 மாநாடு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது. சீனா ரஷ்யாஎன்று அனைத்து நாடுகளும் டெல்லி பிரகடனத்தை ஏற்று கொண்டுள்ளதால் உலக அளவில் மோடியின் புகழ் மேன்மேலும் உயர்ந்து இருக்கிறது.
ஜி-20 மாநாடு முடிந்துள்ள நிலையில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு எதிராக இந்தியா புதிய கட்டமைப்பு திட்டம் ஒன்றை ஜி 20 மாநாட்டில் உருவாக்கி உள்ளது. இந்த நிலையில் தான் சீனாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நேற்று இத்தாலி முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டில் ரயில் மற்றும் துறைமுகங்கள் சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதாவது சாலை போக்குவரத்து, துறைமுகங்கள் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளை இணைக்கும் விதமாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு போட்டியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சீனாவின் பெல்ட் மற்றும் ரோடு பார்வையில் மத்திய கிழக்கு ஒரு முக்கிய பகுதியாகும் வளைகுடா மற்றும் அரபு நாடுகளை ரயில்வே நெட்வொர்க் மூலம் இணைக்கும் விதமாகவும், ஜி 20யில் அருகருகே இருக்கும் நாடுகளை ரயில் மூலம் இணைக்கும் விதமாகவும், மற்ற நாடுகளை கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் விதமாகவும் இந்த ஒப்பந்தம் இருக்கும்
இந்த நிலையில் இந்தியாவின் ராஜாங்க ரீதியான பலம் காரணமாக சீனாவின் கனவு திட்டமான தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் திட்டத்திற்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் வந்தது. ஜி 20 மாநாடு சீனாவின் கனவு திட்டத்திற்கு முடிவுரை எழுத தொடங்கியுள்ளது.
சீனா கனவு திட்டத்தில் செயல்படுத்த பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகிறது.
உலக நாடுகள் அனைத்தையும் சீனாவோடு இணைப்பது.பொருளாதார ரீதியாக உலகம் முழுக்க இருக்கும் சந்தையை ஆக்கிரமிப்பது.உலக நாடுகளின் சந்தையை தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) மூலம் இணைத்து, அங்கு சீன பொருட்களை ஏற்றுமதி செய்வது.
உலகை சீனாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவது. முக்கியமாக பொருளாதார ரீதியான கட்டுப்பாடு.
வியாபாரம், விற்பனை, பொருளாதாரம்தான் இதன் முதல் நோக்கம்.
பெரிய வர்த்தகம்: இந்த திட்டம் மூலம் மொத்தம் 60% மக்கள் இணைக்கப்படுவார்கள். ஆம் உலகம் முழுக்க இருக்கும் 60% மக்கள் இதன் மூலம் இணைக்கப்படுவார்கள். 35% உலக பொருளாதாரம் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும். 40% உலக மார்க்கெட் சந்தை இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும். 75% கடல் ஏற்றுமதி இறக்குமதி போக்குவரத்து இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும்.
இந்த திட்டத்திற்கு ஆப்பு வைத்துள்ளது இந்தியா..
ஜி-7 அமைப்பில்உள்ள நாடுகளான அமெரிக்கா இங்கிலாந்து கனடா பிரான்ஸ் ஜெர்மனி ஜப்பான் இத்தாலி ஆகிய 7 நாடுகளில் இத்தாலி மட்டுமே சீனாவின் ஒன் ரோடு ஒன் பெல்ட் திட்டத்தில் இணைந்து இருந்தது.
இத்தாலியை வைத்து மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒன் ரோ டு ஒன் பெல்ட் திட்டத்தில் கொண்டு வர நினைத்து இருந்த சீ னாவின் முயற்சியை முறியடிக்க அதே இத்தாலியை சீனாவின் ஒன் ரோடு ஒன் பெல்ட்
திட்டத்தில் இருந்து வெளியே ற வைத்து சீனாவுக்கு செக் வைத்து இருக்கிறார் மோடி.